கின்னஸ் சாதனை சான்றிதழுடன் இயக்குநர் அட்லீ, நடிகர் அல்லு அர்ஜூன் 
சினிமா செய்திகள்

அட்லீ இயக்கும் படத்தின் கின்னஸ் சாதனை!

Staff Writer

அட்லீ இயக்கும் 'ராக்கா' திரைப்படம் கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

'ராக்கா' திரைப்படத்தில் அல்லு அர்ஜூன், தீபிகா படுகோன், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

உலகத் திரைப்படமாக ஆங்கிலம், கொரிய, சீன மொழிகளில் இந்தப் படம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்திற்காக உலகின் முன்னணி வி.எஃப்.எக்ஸ். நிறுவனங்கள் பணியாற்றி வருகின்றன. படப்பிடிப்பு மொத்தமும் மும்பையில் செட் அமைக்கப்பட்டு எடுக்கப்படுகிறது.

இந்தத் திரைப்படத் தயாரிப்பில் ஒரே நேரத்தில், 37 நடிகர்களின் அசைவுகள் நிகழ்நேர 'மோஷன் – கேப்சர்' மூலம் படம்பிடிக்கப்பட்டது கின்னஸ் உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

நடிகர்களின் உடல் அசைவுகள், முகப் பாவனைகளைச் சென்சார்கள், கேமராக்கள் உதவியுடன் கணினியில் டிஜிட்டல் கதாபாத்திரங்களாக மாற்றும் தொழில்நுட்பமே 'மோஷன் – கேப்சர்' எனப்படும்.

பொதுவாக 'மோஷன் – கேப்சர்' தொழில்நுட்பத்தில், இதுவரைசில நடிகர்களை மட்டுமே படம் பிடித்துள்ள நிலையில், தற்போது 'ராக்கா' திரைப்படத்திற்காக 37 பேரை ஒரே நேரத்தில் படம்பிடித்ததற்கான கின்னஸ் உலக சாதனைச் சான்றிதழை நடிகர் அல்லு அர்ஜூன், இயக்குநர் அட்லீ இணைந்து பெற்றுக்கொண்டனர்.  

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram