இயக்குநர் லிங்குசாமி 
சினிமா செய்திகள்

தமிழகம் பரிசுத்தமாகிவிட்டது’- முதல்வர் விஜய்க்கு இயக்குநர் லிங்குசாமி சர்டிபிகேட் !

மிஸ்டர் முள்

விஜய் கட்சிக்கு தாவுவது இருக்கட்டும். முதல்வரான பிறகு அவருடன் சேர்ந்து ஒரே ஒரு புகைப்படமாவது எடுத்துக்கொள்ளமாட்டோமா என்று திறைத்துறையினர் ஏங்கிவரும் நிலையில், ‘விஜய் தமிழகத்திலுள்ள அத்தனை துறைகளையும் சுத்தப்படுத்திவிட்டார்’ என்று அவருக்கு நடத்தைச் சான்றிதழ் வழங்கியிருக்கிறார் இயக்குநர் லிங்குசாமி.

இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள லிங்குசாமி,…

எம்.ஜி.ஆர். திரைப்படக் கழகத்தில் இந்தக் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான தேர்வுக் குழுவில், எங்கள் தலைவராக @manojdft அவர்களின் தலைமையில், நானும் எனது சக இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள், படத்தொகுப்பாளர்கள் மற்றும் பிற தொழில்நுட்ப வல்லுநர்களும் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.

நாங்கள் ஒவ்வொரு விண்ணப்பதாரரையும் முற்றிலும் தகுதியின் அடிப்படையில் கவனமாக மதிப்பீடு செய்து, எங்கள் பரிந்துரைகளைச் சமர்ப்பித்தோம். நாங்கள் தேர்ந்தெடுத்த முழுப் பட்டியலும் எந்தவித சமரசமும் இன்றி ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதை அறிந்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.

இந்தப் பொறுப்பை எங்களிடம் ஒப்படைத்ததற்கும், முழு மாணவர் சேர்க்கை செயல்முறையும் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் நடத்தப்படுவதை உறுதி செய்ததற்கும் மாண்புமிகு அமைச்சர் @imrajmohan மற்றும் @CMOTamilnadu ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

மாநிலம் முழுவதும் உள்ள அனைத்துத் துறைகளிலும் இதே தகுதி அடிப்படையிலான, வெளிப்படையான அணுகுமுறை முன்னெடுக்கப்படுகிறது என்பதைக் கேட்பதும் ஊக்கமளிக்கிறது. இந்த முயற்சிக்கு மாண்புமிகு முதல்வர் @TVKVijayH அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். இது ஒரு நீடித்த நேர்மறையான மாற்றத்தைக் கொண்டுவரும் என்று நம்புகிறேன்… என்று பதிவிட்டிருக்கிறார்.

இச்செய்திக்கும் ஹமாம் சோப்பு விளம்பரத்துக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram