சமுத்திரக்கனியுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.முத்தரசன் ‘அரிசி’ எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் இசை, முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது.
நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இசைத் தட்டை வெளியிட, அதை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பெற்றுக்கொண்டார்.
காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், சிபிஐ(எம்எல்)எல் மாநிலச் மாநிலச் செயலாளர் பழ.ஆசைத்தம்பி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் உட்பட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களாக இதில் கலந்துகொண்டனர்.
இதனால், திரைப்பட விழா அரசியல் நிகழ்வைப் போலக் காணப்பட்டது.