சரியான விமர்சங்களை பார்த்து படம் எப்படி இருக்கிறது என்று முடிவு செய்யுங்கள் என நடிகர் தனுஷ் கூறியுள்ளார்.
தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை படம் அக்டோபர் 1ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதில் நித்யா மேனன், சத்யராஜ், பார்த்திபன் சமுத்திரகனி உள்ளிட்ட ஏரளமான முன்னடி நடிகர்கள் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், நேற்று கோவையில் உள்ள மாலில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய தனுஷ், "செஃப் ஆகனும் என்பதுதான் என் ஆசை. அதனாலயோ என்னவோ தெரில, சமைக்கிற மாதிரியான கதையாவே எனக்கு அமையுது. ஜகமே தந்திரம்ல பரோட்டா போட்டேன். திருச்சிற்றம்பலம்ல டெலிவரி பாய், ராயன்ல ஃபாஸ்ட் புட் கடை. இந்த படத்துல இட்லி சுட்டு இருக்கேன். எண்ணம்போல் வாழ்க்கை என்பது போல நாம் மனதில் நினைப்பதே நடக்கிறது
9 மணிக்கு படம்னா 8 மணிக்கே சில ரிவ்யூக்கள் வரும், அதையெல்லாம் நம்பாதீங்க. 9 மணிக்கு படம் ரிலீஸ் ஆகி 12.30 மணிக்கு தான் படம் எப்படி இருக்குனே தெரியும். அதனால், நீங்க பார்த்து முடிவு பண்ணுங்க. இல்லாட்டி, படம் பார்த்த உங்க நண்பர்ங்க என்ன சொல்றாங்கனு கேட்டு முடிவு பண்ணுங்க.
சினிமாவை நம்பி நிறைய தொழில்கள் நடக்கின்றன. அதனால், எல்லா படங்களும் ஓட வேண்டும். சரியான விமர்சங்களை பார்த்து படம் எப்படி இருக்குனு நீங்க முடிவு பண்ணுங்க.” என்றவர், வடசென்னை -2 அடுத்த வருஷம் வருதாக கூறினார்.