பிரதீப் ரங்கநாதன் 
சினிமா செய்திகள்

டியூட் படத்தின் 2 நாள் வசூல் எவ்வளவு...? வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Staff Writer

டியூட் படத்தின் 2 நாள் வசூல் விவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் - இயக்குநர் கீர்த்தீஸ்வரன் கூட்டணியில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் டியூட்.

மலையாள நடிகை மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்துள்ள இந்தப் படத்துக்கு, சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிய பிரதீப் ரங்கநாதன், லவ்டுடே படத்தில் நாயகனாக நடித்தார். டிராகன் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இந்நிலையில் தீபாவளி வெளியீடாக வெளியான டியூட் திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

இந்தப் படத்தின் இரண்டு நாள் வசூல் ரூ.45 கோடியைத் தாண்டியுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இதன் மூலம் முன்னணி நடிகர்கள் வரிசையில் பிரதீப் ரங்கநாதனும் இணைந்துள்ளார்.