ரவிமோகன் - கெனிஷா ஜோடி 
சினிமா செய்திகள்

ரவி மோகன் - கெனிஷா ஜோடி சொன்ன குட் நியூஸ்... வாழ்த்திய கோலிவுட் பிரபலங்கள்!

Staff Writer

நடிகர் ரவி மோகன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தை இன்று தொடங்கியுள்ளார்.

நடிகர் ரவி மோகன் தன் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்ததிலிருந்து அவரை சுற்றி சர்ச்சைகளும் உள்ளன. ஆனால், இதற்கிடையே ஜீனி, கராத்தே பாபு, பராசக்தி ஆகிய படங்களில் நடித்தும் வருகிறார்.

இதில், ஜீனி மற்றும் கராத்தே பாபு படங்கள் இந்தாண்டே வெளியாகவுள்ளன. அடுத்ததாக, பிரபல இயக்குநர்களிடம் கதை கேட்டு வருகிறார்.

இந்த நிலையில், இன்று ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார். அதற்கான அறிமுக விழா சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்றது.

நிகழ்வில், நடிகர்கள் கார்த்தி, சிவகார்த்திகேயன், சிவராஜ் குமார், யோகி பாபு, எஸ்ஜே சூர்யா, பிரபல இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தனது தோழி கெனிஷாவுடன் அரங்கிற்கு வந்த ரவி மோகன், அவரை மற்றவர்களிடம் அறிமுகம் செய்து வைத்தார்.

இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் ஒரே நேரத்தில் இரண்டு திரைப்படங்களை ரவி மோகன் தயாரிக்க உள்ளார். அதில், முதல் படமாக ரவி மோகன் இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிக்கிறார்.

இப்படம் பான் இந்திய திரைப்படமாக உருவாகவுள்ளதாகவும் அனிமல் படத்திற்கு இசையமைத்த ஹர்ஷவர்த்தன் இசையமைக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.