கெனி 
சினிமா செய்திகள்

கர்ப்பமாக இருக்கிறேனா? அதிர்ச்சி கொடுத்த நடிகர் ரவி மோகன் தோழி கெனிஷா!

ச. ஆனந்தப்பிரியா

கெனிஷா கர்ப்பமாக இருக்கிறார் என சமூகவலைதளங்களில் செய்தி பரவியதை அடுத்து நடிகர் ரவி மோகன் தோழி கெனிஷா அதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து பிரிந்துவிட்டதாக சொல்லி விவாகரத்து கோரி குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ரவி மோகனின் இரண்டு மகன்களும் ஆர்த்தியின் பராமரிப்பில் இருக்கும் நிலையில் விவாகரத்து வழங்க மறுத்திருக்கிறார் ஆர்த்தி. அவர் விவாகரத்து வழங்கவில்லை என்றாலும் மனதளவில் அவரை பிரிந்துவிட்டதாகவும் இனிமேல் ஒருபோதும் அவருடன் சேர்ந்து வாழ போவதில்லை என திட்டவட்டமாகத் சமூகவலைதளங்களில் தெரிவித்தார் ரவிமோகன்.

ரவி-ஆர்த்தி பிரச்சினையின்போதே மன அமைதிக்காக ஹீலர் மற்றும் பாடகியான கெனிஷாவின் உதவியை நாடியிருந்தார் ரவி மோகன். அப்போது ஏற்பட்ட ரவி-கெனிஷா பழக்கம் இப்போது நெருங்கிய நட்பாக மாறியிருக்கிறது. இருவரும் லிவ்வின்னில் வாழ்கிறார்களோ என சமூகவலைதளங்களில் பலரும் சந்தேகிக்கும் அளவிற்கு கோவிலுக்கு செல்வது, சுற்றுலா செல்வது, பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக பங்கேற்பது என வலம் வருகிறது ரவி-கெனிஷா ஜோடி. சமீபத்தில் ரவி மோகன் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கியபோது கூட கெனிஷா தான் முன்னிருந்து எல்லா வேலைகளையும் கவனித்தார். இந்த நிலையில், கெனிஷா சமீபத்தில் பதிவிட்டிருந்த புகைப்படத்துடன் ‘உன்னை மிஸ் செய்கிறேன் அம்மா…நான் வளர்ந்திருப்பதை பார்த்தால் மகிழ்வீர்கள்…விரைவில் அறிவிப்பு வரும்’ என்று குறிப்பிட்டிருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள், ‘அவர் கர்ப்பமாக இருக்கிறாரா?’ என்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு கெனிஷா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வீடியோ ஒன்றை வெளியிட்டு, ”நான் கர்ப்பமாக இல்லை. என் வயிற்றுக்குள் நான் சாப்பிடும் உணவு மட்டுமே உள்ளது. நான் குறிப்பிட்டது வேறு ஒரு அறிவிப்பு” எனத் தெளிவுப்படுத்தியுள்ளார்