அண்மையில் மறைந்த இயக்குநர் பாக்யராஜ்தன்னுடைய புத்தகத்துக்காக கவிஞர் வைரமுத்துவிடம் முன்னுரை கேட்டுள்ளார். அடுத்து பத்தாவது நாளில் பாக்யராஜ் திடீரென மறைந்துவிட்டார். இந்நிலையில், அந்தப் புத்தகத்துக்கான முன்னுரையை எழுதிய வைரமுத்து அதை அவரின் வீட்டுக்குச் சென்று பூர்ணிமாவிடம் நேரில் தந்தார்.
இதுகுறித்து வைரமுத்து வெளியிட்டுள்ள சமுக ஊடகக் குறிப்பு:
” 17.06.2026 அன்று ‘படிச்சாப் புடிச்சிர்லாம்’ என்ற தன் சுயசரிதை நூலை எனக்குத் தந்தனுப்பி 'முன்னுரை எழுதிக் கொடுங்கள்' என்று பாசத்தோடு கேட்டார் பாக்யராஜ்.
‘கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்’ என்றேன்.
‘சரி’ என்றார்.
27.06.2026 அன்று அவர் மறைவுற்றார் என்ற செய்தி என்னை நிலைகுலைய வைத்தது.
அதன்பிறகு நூலைப் படிக்கப் படிக்க அவர் பட்ட துயரங்களும், ரணங்களும் அவமானங்களும், வறுமையும் என்னை வாட்டி எடுத்தன.
உணர்ச்சியுள்ள ஒரு முன்னுரை எழுதி முடித்தேன்.
பிறிதொரு சந்தர்ப்பமாய் இருந்திருந்தால் முன்னுரையை மின்னஞ்சலில் அனுப்பியிருப்பேன்.
ஆனால், இந்தச் சூழ்நிலையில் நேரில் சென்று அவர் மனைவியிடம் ஒப்படைப்பதே மரியாதை என்று நினைத்தேன்
நேற்று மாலைஅவர் இல்லம் சென்று திருமதி. பூர்ணிமாவிடம் முன்னுரையை வழங்கினேன்; தம்பி சாந்தனு உடனிருந்தார்
எவர் வெளியிட்டாலும்உடனே வெளியிடுங்கள்; உயிர்த்துடிப்புள்ளபுத்தகம் இது.” என வேண்டுகோளுடன் தெரிவித்துள்ளார், வைரமுத்து.