சினிமா செய்திகள்

MS திரைப்படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் சரிப்பட்டு வரமாட்டார்...

Staff Writer

சில முகநூல் பதிவுகள் ரெகுலர் மீடியாக்களின் செய்திகளைத் தாண்டி சர்ச்சையாகிவிடுகின்றன. கடந்த வருடம், இளையராஜா பயோபிக் படத்துக்கு அடிதடி சண்டைப்பட இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்குநராக அறிவிக்கப்பட்டபோது ராஜாவின் ரசிகர்கள் குய்யோமுறையோவென்று கூவினார்கள். தற்போது அப்படி ஒரு சர்ச்சையை சந்தித்திருக்கும் அறிவிப்பு ‘எம்.எஸ். சுப்புலட்சுமியின் பயோபிக் படத்துக்கு இசையமைப்பாளராக ராக் ஸ்டார் அனிருத் இசையமைப்பாளராக நியமிக்கப்பட்டிருப்பது.

இந்த அறிவிப்பு தொடர்பாக மைல்ட் ஹார்ட் அட்டாக்கை சந்தித்தவர்கள், ‘என்னது சர்க்கரைப் பொங்கலுக்கு வடகறி காம்பினேஷனா ? ‘என்று கோரஸாக அதிர்ச்சி தெரிவிக்க, அதன் தொடர்ச்சியாக பிரபல நாடக ஆசிரியரும் , ‘வேதம் புதிது’ உள்ளிட்ட பல படங்களுக்கு கதை,வசனம் எழுதியவருமான வேதம் புதிது கண்ணன் தனது எதிர்ப்பை ஒரு பதிவாக தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில்,…

MS திரைப்படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் சரிப்பட்டு வரமாட்டார். அனிருத் வைணவ பிராமணர் ‘பெரிய இடத்துப்பிள்ளை,மாப்பிள்ளை

என்பதெல்லாம் தகுதியில்லை.

K.V. மகாதேவனுக்கு பிறகு தகுதியுள்ள இசையமைப்பாளர் இன்று யார் என்றால் இளையராஜா தான்.

தட்சிணாமூர்த்தி ஸ்வாமிகள், TV கோபாலகிருஷ்ணன் ஆகியோரிடம் முறைப்படி கர்னாடக இசை பயின்றவர். தனராஜ் மாஸ்டர் இடம் இசையமைப்பை கற்றவர். பாவலர் வரதராஜன் என்ற இசைகுடும்பத்தில் பிறந்தவர்.

Trinity College of music ல் இசையமைத்தவர்.

ஆன்மீகத்தில் அனிருத்தை விட சிறந்தவர்.

ரமணமகரிஷி மீது ஈடுபாடு கொண்டவர். மூகாம்பிகை பக்தர்.

பிறக்காவிட்டாலும் அனிருத்தைவிட

‘பிராமண குணங்களை’

மறக்காமல் கடைபிடிப்பவர்.

ஶ்ரீரங்கம் ராஜகோபுரத்துக்கு நன்கொடை அளித்தவர்.

மத்திய அரசால் பாராட்டப்படுகிறவர். பத்ம விபூஷன் பெற்றவர். பாரதரத்னா விருது பெறப்போகிறவர்.

பாரதரத்னா MS சுப்புலஷ்மி அவர்களே தன் உயர்வுக்கு Henry Dungan ஐ பயன் படுத்தியிருக்கும் போது நீங்கள் ஏன் ஞானதேசிகன் என்ற இளையராஜா வை பயன் படுத்திக்கொள்ளக்கூடாது ?

குஞ்சம்மா to சண்முகவடிவு சுப்புலஷ்மி to-மடிசார் சுப்புலஷ்மியாகி-சைவமாகி (இந்த similar transition ஐ இளையராஜா வாழ்விலும் பார்ககலாம்) இந்த பகுதிகளை musical ல் இளையராஜா தவிர வேறு யாரால் கையாள முடியும் ?

தன் background music ( re recording ) ல் நம்மை MS வாழ்க்கைக்குள் அழைத்துச்சென்று விடுவார் என்பது மட்டும் திண்ணம்.

He is also born genius like her.

குறிப்பு: யாரையும் புண் படுத்தி எழுதவில்லை.

என்று பதிவிட்டுள்ளார்.

இப்பதிவுக்கு அதிக அளவில் ஆதரவுகளும் ஒரு சில எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram