இசைஞானி இளையராஜா 
சினிமா செய்திகள்

கைவசம் எட்டு படங்களுடன் டாப் கியரில் இசைஞானி இளையராஜா!

Staff Writer

‘’ஆணவமா பேசுற மாதிரி தெரியுதா ?... ஆமா ஆணவமாதான் பேசுறேன். கர்வமா பேசுறதா தெரியுதா ? … ஆமா கர்வமா தான் பேசுறேன். திமிரா பேசுற மாதிரி தெரியுதா ?... ஆமா திமிராதான் பேசுறேன். ஏன்னா என் பாட்டுல நீங்க கேக்குற ஒவ்வொரு சத்தமும் என்னோட சொந்த சரக்கு’’

இசைஞானி இளையராஜா அடிக்கடி மேடைகளில் மார்தட்டிக்கொள்ளும் கலைச் செருக்கு கலந்த சுய தம்பட்டங்கள் இவை.

இந்த கலைச் செருக்கு அவரது 83 வது வயதிலும் கொஞ்சமும் மடிப்பு கலையாமல் அப்படியே தொடர்ந்துகொண்டிருப்பதுதான் ராஜ ரகசியம்.

குறிப்பாக சமீபத்தில் வெளியான ‘டோரதி’ படத்து ’கல்யாண விருந்து’, ‘முத்து மணி’ பாடல்கள் ட்ரெண்டிங்கின் உச்சத்தில் இருக்கின்றன.

அவை இன்றைய ஜென் ஸி காலத்து ட்ரெண்டர்கள் என்று சொல்லக்கூடிய இளம் இசையமைப்பாளர்களை ‘வாடா ஒண்டிக்கு ஒண்டி சண்டைக்கு வர்றியா?’ என்று ஒரண்டை இழுப்பதுதான் இன்னும் சுவாரசியம்.

அடுத்த சர்க்கரைச் செய்தி. தற்போது ராஜா கைவசம் இருக்கும் எட்டுக்கும் மேற்பட்ட முன்னணி இயக்குநர்களின் படங்கள்.

இளையராஜா கைவசம் இருக்கும் படங்கள் விபரம்

1. டோரதி. மிக விரைவில் ரிலீஸாக உள்ள கார்த்திக் சுப்பாராஜ் படம்.

2. பாக்கெட் நாவல். தியாகராஜன் குமார ராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம்.

3. மஞ்சணத்தி. மாரி செல்வராஜ் தயாரித்து இயக்கும் படம்.

4. லெனின் பாண்டியன். கங்கை அமரன் கதைநாயகனாக நடிக்க சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கும் படம்.

5. ’ராஜா 15001’. பெயர் சூட்டப்படாத, பிரபல இந்தி இயக்குநர் பால்கியின் படம்.

6. ராமராஜனுடன் மீண்டும் கைகோர்க்கும் ‘கடவுள் தந்த பரிசு’.

7. ‘துப்பறிவாளன் 2’ விஷால் நடித்து இயக்கும் படம்.

8. ’ராஜா 1502’.கார்த்திக் சுப்பாராஜ் இயக்கும் அடுத்த படம்.

இவை போக ‘அரிசி’, தட்டு வண்டி’, ‘வால்மீகி ராமாயணம்’ மற்றும் சில தெலுங்கு, மலையாள, கன்னடப்படங்களும் ராஜாவுக்காக காத்திருக்கின்றன.

இப்ப சொல்லுங்க… ராஜா ஆணவமா, கர்வமா, திமிரா பேசலாம் தானே?

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram