தென்னிந்திய சினிமாவின் மூத்த பின்னணிப் பாடகி ஜமுனா ராணி, தனது 88ஆவது வயதில் மூப்பு காரணமாக உயிரிழந்தார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சிங்களம் ஆகிய மொழிகளில் 6,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.
முதன்முதலாக 1944-ல் தெலுங்கில் வெளியான 'தாசில்தார்' படத்தில் பாடகியாக அறிமுகமானார்.
பின்னர், 1952-ல் தமிழில் 'கல்யாணி' எனும் படத்தில் முதல் பாடலைப் பாடினார்.
'குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே', 'யாரடி நீ மோகினி', 'செந்தமிழ்த் தேன் மொழியால்' உட்பட்ட சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார்.
தமிழக அரசால், 1998ஆம் ஆண்டு 'கலைமாமணி விருதும்', 2002ஆம் ஆண்டு 'அறிஞர் அண்ணா கவுரவ விருதும்' இவருக்கு வழங்கப்பட்டது.