தனுஷ் 55 படத்தில் சாய் பல்லவி 
சினிமா செய்திகள்

தனுஷ் 55 படத்தில் சாய்பல்லவியும் இணைகிறார்!

Staff Writer

தனுசின் 55ஆவது திரைப்படத்தில் ஏற்கெனவே ஸ்ரீலீலா நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

ராஜ்குமார் பெரியசாமி எழுதி, இயக்கும் இப்படத்தில், சாய்பல்லவியும் அவரோடு இணைகிறார்.

படக்குழு அதிகாரபூர்வமாக இதை அறிவித்துள்ளது. 

சாய் அபயங்கர் இப்படத்துக்கு இசையமைக்கிறார். 

ஐசரி கணேஷ் தயாரிப்பில் போர்த்தொழில் பட இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில், தனுஷ் இப்போது ’கர’ என்னும் புதிய படத்தில் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.