ஷகீலாவுக்கு கழுத்து அறுவை சிகிச்சை 
சினிமா செய்திகள்

நடிகை ஷகீலாவுக்கு கழுத்து அறுவை சிகிச்சை- அவரே சொல்லும் காரணம்!

Staff Writer

பிரபல தென்னிந்திய நடிகை ஷகீலா அண்மையில் கழுத்து அறுவை சிகிச்சை செய்துகொண்ட வீடியோ ஒன்றை வெளியிட்டது, சமூக ஊடகங்களில் பரவலாகிவருகிறது.

இதுகுறித்து அவர் தன் சமூக ஊடகப் பதிவில் கூறியிருப்பதாவது:

"நான் எப்போதும் என் படுக்கையில் ஒருபக்கமாகப் படுத்துக்கொண்டு, தொடர்ந்து நான்கு மணி நேரம்வரை என் கைப்பேசியில் கேம் விளையாடுவேன்.

இடையில், தேநீர் அருந்துவதற்காக மட்டுமே எழுவேன். பின்னர், மீண்டும் விளையாடத் தொடங்கி விடுவேன்.

விளையாடி முடித்த பிறகு, யூ டியூப், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் பல மணி நேரம் வீடியோ பார்ப்பேன்.

உடலைச் சரியான நிலையில் வைத்துக்கொள்ளாதது, அதிகமாகக் கைப்பேசியைப் பயன்படுத்தியது ஆகிய காரணங்களால் எனது கழுத்தில் உள்ள முக்கிய இரத்த நாளங்கள் பாதிப்படைந்தன.

இதனால், நான் அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.

எனவே, அத்தியாவசிய விஷயங்களுக்கு மட்டும் கைப்பேசியைப் பயன்படுத்துங்கள். என்னுடைய காணொலியாக இருந்தாலும், தேவையானதை மட்டும் பாருங்கள்.

இல்லையென்றால், நீங்கள் 3 லட்ச ரூபாயை இழப்பதோடு, தாங்க முடியாத வலி, வேதனையையும் அனுபவிக்க வேண்டும்." என்று ஷகீலா விழிப்புணர்வாகவும் அந்தக் காணொலியில் கூறியுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram