'ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே' 
சினிமா செய்திகள்

முதல் நாளில் அள்ளிய வசூல்... சாதனை படைத்த முதல் ஹாலிவுட் படம் ஸ்பைடர்மேன்!

Staff Writer

இந்தியாவில் முதல் நாளிலேயே அதிக வசூல் செய்த முதல் ஹாலிவுட் படமாக 'ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே' சாதனை படைத்துள்ளது.

இயக்குநர் டெஸ்டின் டேனியல் கிரிட்டோன் இயக்கத்தில் டாம் ஹாலண்ட், ஜெண்டாயா, ஜேக்கப் பேட்டலான், மார்க் ருஃபாலோ உட்பட்டோர் நடிப்பில் 'ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே' உருவாகியுள்ளது.

இந்தத் திரைப்படம் இந்தியாவில் கடந்த வியாழன் வெளியான நிலையில், ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு 'ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்' திரைப்படம் வெளியாகி 5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் திரைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

இந்தியாவில் வெளியான முதல் நாளிலேயே ரூ. 72.44 கோடி வசூலித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் முதல் நாளிலேயே அதிக வசூல் செய்த சாதனையை இப்படம் நிகழ்த்தியுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram