தாய் கிழவி 
சினிமா செய்திகள்

சர்வதேச திரைப்பட விழாவில் ராதிகா சரத்குமார் நடித்த 'தாய் கிழவி'!

Staff Writer

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் 'இந்தியன் பனோரமா' பிரிவில் திரையிட 'தாய் கிழவி' திரைப்படம் தேர்வாகியுள்ளது.

வரும் நவம்பர் 20ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை, 57ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 25 முழுநீளப் படங்களின் பட்டியலில் 'தாய் கிழவி' திரைப்படம் இடம் பெற்றுள்ளது.

இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில், மூத்த நடிகை ராதிகா சரத்குமார் முதன்மையான கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

நடிகர் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனமான எஸ்.கே. புரோடக்சன்ஸ், பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்த இப்படம், கடந்த பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியானது.

கிராமத்து பின்னணியில் நகைச்சுவை கலந்து வெளியான 'தாய் கிழவி' திரைப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று ரூ. 75 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

அறிவு

இதேபோல, சாய் வினோத் தயாரிப்பில், இயக்குநர் சத்யசிவா இயக்கிய 'அறிவு' திரைப்படமும் தியேட்டர்களில் வெளியாவதற்கு முன்பே இந்த சர்வதேச விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது.

'உறியடி' விஜயகுமார், 'கயல்' ஆனந்தி நடித்துள்ள பெண்களின் உரிமைகள் தொடர்பான இப்படம் தியேட்டர்களில் வரும் டிசம்பர் 11ஆம் தேதி வெளியாகவுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram