நடிகை வத்சலா ராஜகோபால் மறைவு 
சினிமா செய்திகள்

நடிகை வத்சலா ராஜகோபால் மறைவு!

Staff Writer

வெள்ளித்திரை, சின்னத்திரை இரண்டிலும் சிறந்து விளங்கிய பழம்பெரும் நடிகையான வத்சலா ராஜகோபால் (93) மூப்பு காரணமாக இன்று காலமானார்.

கடந்த 1979ஆம் ஆண்டு முதல் மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கிய இவர், தன் வாழ்நாளில் 450க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முதன்முதலாக, 1992ஆம் ஆண்டு இயக்குநர் மணிரத்தினத்தின் 'ரோஜா' திரைப்படத்தில் தனது 60ஆவது வயதில் பாட்டியாக அறிமுகமானார். பின்னர், 'சதி லீலாவதி', 'ரிதம்', 'திருடா திருடி', 'காலமெல்லாம் காதல் வாழ்க', 'அந்நியன்', 'வின்னர்', மொழி' உட்பட 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாட்டி, தாயார் கதாப்பாத்திரங்களில் இவர் நடித்துள்ளார்.

இதுமட்டுமின்றி, 'சித்தி', 'ஆனந்தம்', 'முந்தானை முடிச்சு' போன்ற புகழ்பெற்ற தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். இவரது உடல் சென்னையில் உள்ள பல்லாவரத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram