சினிமா செய்திகள்

வெற்றிமாறன் – எஸ்.டி.ஆர். கூட்டணி: டைட்டிலை அறிவித்த படக்குழு!

Staff Writer

வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் உருவாகிவரும் படத்தின் பெயர் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் இயக்குநர் வெற்றி மாறன் - எஸ்டிஆர் கூட்டணியில் வடசென்னை உலகில் கேங்ஸ்டர் திரைப்படமாக எஸ்டிஆர் - 49 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. படப்பிடிப்பு முடிவடைந்து பல நாள்கள் ஆகிவிட்டது.

படத்தின் அறிமுக வீடியோ மட்டுமே வெளியான நிலையில், புரோமா அக்டோபர் 4 ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால், சென்சார் காரணங்களால் வெளியாகவில்லை.

பெயர் அறிவிப்பு இன்று காலை 8.09 மணிக்கு வெளியாகும் என தயாரிப்பாளர் தாணு தெரிவித்தார்.

அதன்படி, படத்தின் பெயர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. படத்துக்கு ‘அரசன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. போஸ்டரில் வடசென்னை யுனிவர்ஸில் சிம்பு 80-ஸ் கெட்டப்பில் கையில் அரிவாளுடன் நின்றுகொண்டிருக்கிறார்.

பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வடசென்னை 2 பாகத்துக்கு முன்னதாக, வடசென்னை யுனிவர்ஸின் சிம்புவின் படம் வெளியாகவுள்ளதால், இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.