பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகியின் மறைவையொட்டி கவிஞர் வைரமுத்து இரங்கல் குறிப்பு வெளியிட்டுள்ளார்.
அவரின் இரங்கல் குறிப்பு :
“ செளகார் ஜானகி
கலைப் பெண்களில்
பெருமைக்குரிய பெருமாட்டி
பதின்பருவம் முதல்
உதிர்பருவம் வரை
நகர்ந்துகொண்டே இருந்த
நட்சத்திரம்
400படங்கள் என்பது
இனிவரும் தலைமுறைக்கு
வாய்க்காத வரலாறு
பெண்ணினத்தின்
காத்திரமான
பாத்திரங்கள் அனைத்தையும்
நடித்துக்காட்டிய நாயகி
'இரு கோடுகள், புதிய பறவை
படிக்காத மேதை, எதிர் நீச்சல்
பாக்கியலட்சுமி, ஒளிவிளக்கு
பெற்றால்தான் பிள்ளையா' இப்படி
எம்.ஜி.ஆர் - சிவாஜி - ஜெமினி
என்ற முப்பெரும் கலைஞர்களுக்கும்
ஈடுகொடுத்த ஒப்பிலா நடிகை
ரங்கராட்டினம் என்ற
ஒருபடத்தில் தவிர
அவர் எந்தப் படத்திலும்
கவர்ச்சி காட்டியதில்லை
உடலைவிட
உடல்மொழியை நம்பினார்
ஆங்கிலத்தைத்
தாய்மொழிபோல் பேசும்
சில நடிகைகளுள்
தலைசிறந்தவர் செளகார் ஜானகி
பத்மபூஷணுக்கே உரிய
பத்மஸ்ரீ அவர்
ஆந்திரா இந்தியாவிற்குக்
கொடுத்தகொடை முடிந்துவிட்டது
அவர்
பூ உடம்பு மறையலாம்;
புகழ் உடம்பு மறையாது
அவருக்கு என் அஞ்சலி;
கலையன்பர்களுக்கும்
குடும்பத்தார்க்கும்
ஆழ்ந்த இரங்கல் ”