அன்பே டயானா படத்தின் போஸ்டர் 
சினிமா

‘அன்பே டயானா...’ ஜமா பட இயக்குநரின் அசத்தல் அப்டேட்!

Staff Writer

ஜமா திரைப்பட இயக்குநர் பாரி இளவழகனின் புதிய திரைப்பட போஸ்டர் வெளியாகியுள்ளது.

ஜமா திரைப்படம் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் பாரி இளவழகன். அப்படத்தில் நாயகனாக அறிமுகமாகி சிறப்பான நடிப்பையும் கொடுத்திருந்தார்.

அடுத்ததாக, அவரே இயக்கி, நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இதனை, லவ்வர், டூரிஸ்ட் ஃபேமிலி ஆகிய திரைப்படங்களைத் தயாரித்த மில்லியன் டாலர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் நடித்த நடிகை ரம்யா ரங்கநாதன் நாயகியாக நடித்துள்ளார்.

இந்த நிலையில், இப்படத்திற்கு ’அன்பே டயானா’ எனப் பெயரிட்டுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. காதல் திருமணத்தை மையமாக வைத்து இது உருவாகியிருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது.