விஜய் - த்ரிஷா 
சினிமா

“விஜயின் கனவு நிறைவேற வேண்டும்'' - வாழ்த்து தெரிவித்த த்ரிஷா; வைரலாகும் வீடியோ!

Staff Writer

நடிகை த்ரிஷா, விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் (SIIMA) வழங்கும் விழாவில், சினிமாவில் 25 ஆண்டுகளாக பயணித்து வரும் த்ரிஷாவுக்கு சிறப்பு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

அப்போது நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் புகைப்படத்தை காட்டி, அவர் பற்றி பேசுமாறு த்ரிஷாவிடம் கேட்கப்பட்டது.

அதற்கு த்ரிஷா, விஜய்யின் புகைப்படத்தை பார்த்து சிரித்துவிட்டு, "அவரின் புதிய பயணத்திற்கு குட் லக். அவரின் கனவு எதுவாக இருந்தாலும் அது நிறைவேற வேண்டும்" என்று விஜய்யின் அரசியல் பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.