டாப்சி - மோடி 
சினிமா

இந்தியாவில் வாழ நினைக்கிறேன்... மோடியை பிடிக்குமா என்ற கேள்விக்கு டாப்சி பதில்!

Staff Writer

ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை டாப்சியிடம் ‘உங்களுக்கு மிகவும் பிடித்த அரசியல் தலைவர் யார்’ என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் “நான் இந்த நாட்டிற்குள் இன்னும் பல ஆண்டுகள் வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். எனவே எனது பதில் மோடி" என்று பதில் அளித்துள்ளார்.

இவரது இந்த பதில் தற்போது இந்திய அளவில் கவனத்தை பெற்றுள்ளது. இதனால் அவரை பாஜகவினர் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.

நடிகை டாப்சி இப்படி பாஜகவினரை ட்ரோல் செய்வது இது முதல் முறை இல்லை. கொரோனா காலகட்டத்தில், நாட்டு மக்கள் அனைவரையும் வீட்டு விளக்குகளை அனைத்து விட்டு விளக்குகளை ஏற்றுங்கள். மேலும் கைகளைத் தட்டுங்கள் என்று பிரதமர் மோடி கூறியிருந்தார். இவரது பேச்சைக் கேட்டு பலரும் நாடு முழுவதும் இதைச் செய்தார்கள்.

அப்போது டாப்ஸி தனது எக்ஸ் பக்கத்தில், " யோ.. யோ.. நம் அனைவருக்கும் புதிய வேலை வந்துவிட்டது.. யோ.. யோ" என்று கிண்டலாக பதிவிட்டிருந்தார். இவரது இந்த போஸ்ட் பலரது கவனத்தை ஈர்த்தது.

அப்போதே சிலர், டாப்ஸியின் இந்த போஸ்ட் பிரதமர் மோடியை கிண்டல் செய்வது போல் உள்ளதென கருத்து பதிவிட்டிருந்தனர்.

அதேபோலத்தான் பிரதமர் நரேந்திர மோடியா? காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியா என்ற கேள்விக்கு, நான் இந்த நாட்டிற்குள் இன்னும் பல ஆண்டுகள் வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். எனவே எனது பதில் மோடி" என்று கிண்டலாக டாப்சி பதிலளித்துள்ளார்.

மேலும், காந்தி, அம்பேத்கர், சார்கார் இந்த மூவரில் யாரை பிடிக்கும் என்ற கேள்விக்கு காந்தியை பிடிக்கும் என்று பதிலளித்துள்ளார்.