இரண்டு வருடங்களுக்கும் மேலாக கோமா ஸ்டேஜில் கிடக்கும் ’இந்தியன் 3’ இன்னும் மூன்று மாதங்களில் ஜனவரி27 பொங்கலை ஒட்டி ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தயாரிப்பு நிறுவனத்துக்கும் இயக்குநர் ஷங்கருக்கும் பொங்கலுக்குப் பதில் அல்வா கொடுத்திருக்கிறார் கமல்.
2024 ஜூலையில் வெளியான இந்தியன் 2’ படுதோல்வி அடைந்த நிலையில், அத்தோடு சேர்த்து அறிவிக்கப்பட்டிருந்த இந்தியன் 3’ தற்காலிகமாக கிடப்பில் போடப்பட்டது.
கமல் அப்படி ஒரு படம் இருப்பதையே மறந்து அடுத்தடுத்த பணிகளில் மூழ்கிவிட, ஷங்கரும் தயாரிப்பு தரப்பும் ’இன்னொரு ரெண்டுவாரம் கால்ஷீட் கொடுங்க. படத்தை முடிச்சி ரிலீஸ் பண்ணிடலாம்’ என்று கமலை நச்சரித்துக்கொண்டிருந்தார்கள். இடையில் கொஞ்சம் மனம் இறங்கி கமல் ஓ.கே சொல்லவே கடந்த அக்டோபரில் ‘ சமரசம் இல்லாத மனநிலையுடன் சேனாதிபதி திரும்பிவிட்டார்.‘இந்தியன் 3:வார் மோட்’ மூலம் அந்த மறுவருகை தொடங்குகிறது ‘என்று அறிவித்தனர். அத்தோடு கமலின் பிறந்தநாளான நவம்பர் 7 அன்று பட ரிலீஸ் தேதியை அறிவிக்கவும் தயாராக இருந்தனர்.
ஆனால் இடையில் என்ன நடந்ததோ தனது முடிவிலிருந்து பின் வாங்கிய கமல் இந்தியன் 3’க்கு கொடுத்திருந்த 15 நாள் கால்ஷீட்டை வாபஸ் பெற்று யு.எஸ். அருண்குமார் இயக்கும் புதிய படத்துக்கு தயாராகிவிட்டார். இப்பட அறிவிப்புதான் கமல் பிறந்த தினத்தை ஒட்டி வரவிருக்கிறது.
கமல் இப்படி திடீரென பேக் அடித்ததால் ஷாக் ஆன ஷங்கரும் தயாரிப்பு தரப்பும் ‘ஆண்டவரே இப்படி சோதித்தால் யாரிடம் போய் முறையிடுவது’ என்று கலங்கிப்போய் இருக்கிறார்கள்.