நடிகர் அஜித்குமார் 
சினிமா

ஈரான் தாக்குதல்... துபாயில் உள்ள அஜித் நிலைமை என்ன?

Staff Writer

துபாயில் நடக்கும் போர் தாக்குதல் குறித்து அஜித் குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கமளித்துள்ளார்.

அமெரிக்காவும் இஸ்ரேலும் சேர்ந்து ஈரான் மீது தாக்குதல்கள் தொடங்கியதையடுத்து உலகம் முழுவதும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. முக்கியமாக, வளைகுடா நாடுகள் தாக்குதலுக்கு ஆளாகலாம் என்பதால் பல விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.

முக்கியமாக, ஈரான் ராணுவம் துபாயிலுள்ள அமெரிக்க ஆதரவு நிறுவனங்களைத் தாக்கி வருகிறது. அதேநேரம், ஐக்கிய அமீரகம் ஈரானின் தாக்குதல்களைச் சமாளிக்கும் வகையில் தாக்குதல் ஏவுகணைகளை வானிலேயே அழித்தும் வருகின்றன.

இதற்கிடையே, துபாயிலுள்ள இந்தியர்களைப் பாதுகாப்பாக இருக்கச் சொல்லியும் விரைவில் அவர்களை தாயகம் அழைத்தும் வரும் முயற்சிகளை மேற்கொள்ள மத்திய அரசு ஆலோசனை செய்து வருவதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், துபாயில் நடைபெறும் கார் பந்தயத்தில் கலந்துகொள்ள நடிகர் அஜித் குமார் அங்கு சில மாதங்களாக தொடர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

துபாயில் போர் பதற்றம் காரணமாக, அவருக்கு என்ன ஆனது என ரசிகர்கள் கவலையடைந்த நிலையில், அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா, “நடிகர் அஜித்குமார் பாதுகாப்பான இடத்தில் நலமாக உள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.