‘கட்டா குஸ்தி பார்ட்2’வின் வெற்றியால் படு குஷியாக இருந்த விஷ்ணு விஷால் இயக்குநர் அருண்ராஜா காமராஜுடன் கட்டி உருண்டு கொண்டிருப்பதுதான் கோடம்பாக்கத்தின் ஹாட்.
இதுகுறித்து நீண்ட அறிக்கை வெளியிட்டுள்ள விஷ்ணு விஷால், அருண் ராஜாவுடன் ஏற்பட்ட கிரியேட்டிவ் கருத்து மோதல்கள் மற்றும் பட்ஜெட் தொடர்பான சிக்கல்களால் படத்தை கைவிடுவதாக கொஞ்சம் ஈயம் பூசி மறைக்க முயன்றிருக்கிறார் என்றாலும் நிஜ சண்டை உக்கிரமானது என்கிறார்கள்.
சுமார் 15 மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்ட அப்படத்துக்கு ஸ்டோரி டிஸ்கஷன் என்ற பெயரில் இரு மாதங்களுக்கு ஒருமுறை கதையை மாற்றிக்கொண்டே வந்த அருண்ராஜா தனக்கு சம்பளமாக பேசப்பட்ட 5 கோடியில் மூன்றரை கோடி வரை அட்வான்ஸ் வாங்கிக்கொண்டு சில டெக்னீஷியன்களுக்கும் அட்வான்ஸ் வாங்கிக்கொண்டு படப்பிடிப்புக்கு செல்லும் தேதிகளை சொல்லாமல் இழுத்தடித்தாராம்.
இதனால் மனம் வெறுத்துப்போன விஷ்ணு விஷால் அப்படத்தை ஒரேயடியாக கைகழுவி விட்டு அருண்ராஜா மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்கவிருக்கிறாராம்.
இந்த சண்டையை கட்டா குஸ்தி பார்ட்3 யாக எடுத்தா நிச்சயம் பந்தயம் அடிக்கும்.