ஏப்ரலிலேயே படப்பிடிப்பு முடிந்துவிட்டது. ரிலீஸை நோக்கிய போஸ்ட் புரடக்ஷன் பணிகள் நடக்கின்றன என்று சொல்லப்படும் ரஜினி,நெல்சன் காம்போவின் ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பு இன்னும் அவ்வப்போது தொடர்ந்துகொண்டிருக்கிறது. அதற்கு படத்தில் ரஜினி சொன்ன கரெக்ஷன்கள் தான் காரணம் என்கிறார்கள்.
கமல் தயாரிப்பில் ‘தர்மன்’ படப்பிடிப்பு ரஜினி முழுவீச்சில் தயாராகிவிட்டாலும் வரும் தீபாவளிக்கு ரிலீஸாகவிருக்கும் அவரது ‘ஜெயிலர்2’ படத்தைவிட்டு அவர் முழுமையாக வெளியே வரவில்லை. போஸ்ட் புரடக்ஷனின் பணிகளில் மும்முரமாக இருக்கும் இயக்குநர் நெல்சனை அவர் விடாமல் ஃபாலோ செய்துவருவதோடு சில காட்சிகளை ரீஷூட் செய்யவும் சொல்லியிருக்கிறார்.
இப்படம் பான் இந்தியா படமாகவும் ஆகவேண்டும் என்பதற்காக ஷாருக் கான் போன்ற முன்னணி நடிகர் ஒருவர் இருக்கவேண்டும். அவர் முக்கியமாக க்ளைமேக்ஸ் காட்சிகளில் வரவேண்டும் என்றும் ஆசைப்பட்ட ரஜினி தானே ஒன்றிரண்டு பாலிவுட் நடிகர்களை நடிக்கவைக்க முயன்று கடைசியில் பலிகடாவாக சிக்கியிருப்பவர் ஹ்ரித்திக் ரோஷன்.
இவர் தொடர்பான காட்சிகளும் இப்போது படமாக்கப்பட்ட நிலையில் படத்தின் நீளம் மிகவும் அதிகமாகிவிட்டதால் கெஸ்ட் ரோலில் நடித்திருந்த விஜய் சேதுபதியின் காட்சிகளை மிகவும் குறைக்கவேண்டிய நிலையாம்.
அத்தகவல் ரஜினிக்கு பாஸ் செய்யப்பட ‘கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. எந்தெந்த காட்சிகளைக் குறைக்கலாம்னு நான் சொல்றேன்’ என்று படக்குழுவினரை காக்கவைத்திருக்கிறாராம் ‘தர்மன்’ ரஜினி.
கலாநிதிமாறன் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்திருக்கிறார். மணமகனே மருமகனே வா வா.