சினிமா

ஜனநாயகனால் தள்ளிப்போகிறதா விஜய் மகன் படம் ?

Staff Writer

விஜய் முதல்வரான பிறகும் கம்முன்னு கிடந்த ‘ஜனநாயகன்’ ரிலீஸ் விவகாரம் மறுபடியும் உயிர்பெற்றுள்ள நிலையில், போயும் போயும் தன் சொந்த மகன் படத்தோடு விஜய் மோதப் போகிறாரா என்றொரு டாபிக் சூடுபிடித்துள்ளது.

தமிழக சட்டமன்றத்தேர்தலுக்கு சில மாதங்கள் முன்னரே விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸுக்குத் தயாராக இருந்தாலும் அடுத்தடுத்து சென்சார் கொடுத்த குடைச்சல்களால் அப்படம் ரிலீஸாகவில்லை. பின்னர் விஜய் தன் முழு கவனத்தை அரசியல் பக்கம் திருப்பிய நிலையில், அப்படி ஒரு படம் தயாராக இருப்பதை விஜய்யும் படக்குழுவினரும் பொருட்படுத்தவே இல்லை. பின்னர் படம் சில விஷமிகளால் சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட நிலையில் அதை ஒரு கோடியே இருபது லட்சம் பேர் பார்த்துவிட்டதாக செய்திகள் நடமாடி வருகின்றன.

இந்நிலையில், பழசையெல்லாம் மறந்து, கடந்த வாரம் மீண்டும் சென்சார் குழுவினர் ஜனநாயகனைப் பார்த்து சில கட்கள் கொடுத்த நிலையில் இம்மாதம் 24 அல்லது31ம் தேதி ரிலீஸ் என்று சொல்லப்படுகிறது.

ரிலீஸ் தேதியை ஜனநாயகன் தயாரிப்பு நிறுவனம் இன்னும் முறையாக அறிவிக்காத நிலையில் இப்படம் விஜய் மகன் சஞ்சய் ஜேஸனின் ‘சிக்மா’ படத்தோடு மோத வாய்ப்புண்டு என்கிறார்கள்.

சுமார் ஒரு மாதத்துக்கு முன்னரே சஞ்சயின் ‘சிக்மா’ ரிலீஸ் தேதியை அப்படக்குழு அறிவித்திருந்த நிலையில் மகனுக்காக தந்தை கொஞ்சம் தள்ளிப்போவாரா அல்லது தந்தையின் படத்துக்கு வழிவிட்டு மகன் ஆகஸ்ட்டுக்கு ரிலீஸ் தேதியை அறிவிப்பாரா என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும்.

சிக்மாவுக்கு இப்படி ஒரு சிக்கலாம்மா ?

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram