கங்குவா சூர்யா 
சினிமா

10,000 திரைகளில் கங்குவா… வசூலில் சாதிக்குமா?

Staff Writer

கங்குவா திரைப்படம் 10,000 திரைகளில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் படத்தின் வசூல் குறித்து ரசிகர்கள் மத்தியில் ஆவல் எழுந்துள்ளது.

நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படம் நாளை பிரம்மாண்டமாக வெளியாகிறது. தென்னிந்திய அளவில் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் அதிக திரைகளில் வெளியிட உள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது.

தமிழகத்தில் 800 திரைகளிலும் வட இந்தியாவில் 3500 திரைகளென இந்திய அளவில் 6000 திரைகள் உள்பட உலகளவில் 10,000 திரைகளில் கங்குவா வெளியாகிறது. இவ்வளவு திரைகளில் வெளியாகும் முதல் சூர்யா படம் இதுதான்.

அதைத்தாண்டி, தென்னிந்திய அளவில் அதிக திரைகளில் வெளியான படங்களில் பட்டியலிலும் கங்குவா இணையவுள்ளது. திரைகளின் எண்ணிக்கையைக் கணக்கில் வைத்தால், கங்குவா முதல் நாள் வசூலாகவே ரூ. 100 கோடியை நெருங்கும் எனத் தெரிகிறது.

ஒருவேளை இப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றால், கிடைத்திருக்கும் திரைகளைக் கொண்டு வசூல் ரீதியாக இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்யும். நடிகர் சூர்யாவுக்கும் இந்திய அளவில் அங்கீகாரம் கிடைக்கலாம்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram