ஆந்திரப்பிரதேச துணைமுதல்வரும், அம்மாநில சூப்பர் ஸ்டார்களில் ஒருவருமான பவன் கல்யாண் தனது மூன்றாவது மனைவியுடனான 13 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாகவும் பரஸ்பர புரிதலுடன் இருவரும் பிரிவதாகவும் அறிக்கை வெளியிட்டு தனது ஆதரவாளர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
திரையுலகில் சூப்பர் ஸ்டார்… அரசியலில் அதிரடி ஆளுமை… ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதலமைச்சர். ஆனால் அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் மட்டும் மூன்று திருமணங்கள், மூன்று பிரிவுகள் என்ற சோகமான அத்தியாயம்!
பவன் கல்யாணின் முதல் திருமணம் 1997-ம் ஆண்டு நந்தினியுடன் நடைபெற்றது.
இது குடும்பத்தினர் ஏற்பாடு செய்த திருமணம் என்று பவன் கல்யாண் பின்னாளில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த நேரத்தில் பவன் கல்யாண் திரையுலகில் வளர்ந்து கொண்டிருந்த நடிகர். அவரது திருமண வாழ்க்கை குறித்த செய்திகள் அப்போது பெரிதாகப் பொதுவெளியில் விவாதிக்கப்படவில்லை.
ஆனால் திருமணத்திற்குப் பிறகு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.
1999-ம் ஆண்டிலேயே இருவரும் பிரிந்து வாழத் தொடங்கியதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
2008-ல் விவாகரத்து சட்டரீதியாக நிறைவடைந்தது.
பவன் கல்யாணின் இரண்டாவது திருமணம் நடிகையும் மாடலுமான ரேணு தேசாய் உடன் நடைபெற்றது.
நந்தினியுடனான திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்த பின்னர், பவன் கல்யாணின் வாழ்க்கையில் ரேணு தேசாய் அறிமுகமானார்.
2000-ம் ஆண்டு வெளியான பத்ரி (Badri) திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர். இந்தப் படம்தான் அவர்களது நெருக்கத்திற்கான முக்கியமான தொடக்கமாக அமைந்தது.
தொடர்ந்து ஜானி (Johnny) திரைப்படத்திலும் இருவரும் இணைந்து பணியாற்றினர்.
திரைப்படங்களில் இணைந்து நடித்தபோது உருவான நட்பு, பின்னாளில் காதலாக மாறியது.
திருமணம் – 2009
2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் பவன் கல்யாணும் ரேணு தேசாயும் திருமணம் செய்து கொண்டனர்.
இந்தத் தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தனர்.
• மகன்: அகிரா நந்தன்
• மகள்: ஆத்யா
குழந்தைகளுடன் குடும்ப வாழ்க்கையைத் தொடங்கிய இந்தத் தம்பதியரின் உறவும் நீண்ட காலம் நீடிக்கவில்லை.
2012 – பிரிவு
2012-ம் ஆண்டில் இருவரும் பிரிந்தனர். அவர்களது திருமண உறவு முடிவுக்கு வந்தது.
பவன் கல்யாணின் மூன்றாவது திருமணம் அவரது ரசிகர்களுக்கும் தெலுங்குத் திரையுலகினருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இந்த முறை அவரது வாழ்க்கையில் இணைந்தவர் ரஷ்யாவைச் சேர்ந்த அன்னா லெஷ்னேவா (Anna Lezhneva).
அன்னா ஒரு முன்னாள் மாடலும் நடிகையும் ஆவார்.
2011-ம் ஆண்டு வெளியான தீன் மார் (Teen Maar) திரைப்படத்தில் பவன் கல்யாண் நடித்தார். இந்தப் படத்தில் அன்னா லெஷ்னேவாவும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
படப்பிடிப்பின்போதுதான் இருவருக்கும் அறிமுகம் ஏற்பட்டது.
அந்த அறிமுகம் நாளடைவில் நெருக்கமாக மாறியது. பின்னர் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். என்கிறது அந்த அறிக்கை.
2013 செப்டம்பர் மாதம் பவன் கல்யாணும் அன்னா லெஷ்னேவாவும் திருமணம் செய்து கொண்டனர்.
இந்தத் திருமணத்தின் மூலம் பவன் கல்யாண் மூன்றாவது முறையாகத் திருமண வாழ்க்கையில் இணைந்தார்.
இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
• மகள்: பொலேனா அஞ்சனா பவனோவா
• மகன்: மார்க் சங்கர் பவனோவிச்
அன்னா திருமணத்திற்குப் பின்னர் பெரும்பாலும் ஊடக வெளிச்சத்திலிருந்து விலகியே இருந்தார். பவன் கல்யாணின் அரசியல் நிகழ்ச்சிகள் மற்றும் குடும்ப நிகழ்வுகளில் அவ்வப்போது மட்டுமே தென்பட்டார்.
திருமணத்திற்குப் பிறகு அன்னா கொனிடேலா என்ற பெயரையும் பயன்படுத்தத் தொடங்கினார்.
தற்போது என்ன நடந்ததோ தெரியவில்லை. இருவரும் பிரிந்துவிட்டதாக அறிவித்துள்ளனர். அந்த அறிவிப்பானது வழக்கமான சினிமாக்காரர்கள் பிரிவின்போது வெளியிடும் அதே டெம்ப்ளேட்டில் இருப்பது இன்னொரு சோகம்.
எங்கள் நலம் விரும்பிகள், உற்றார் மற்றும் உறவினர்களுக்கு...
எங்கள் வாழ்க்கையின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியை ஒன்றாகப் பகிர்ந்துகொண்ட பிறகு, பரஸ்பர புரிதல் மற்றும் மரியாதையுடன் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம்.
எங்கள் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தாலும், நாங்கள் தொடர்ந்து நல்ல நண்பர்களாகவும், எங்கள் அருமையான குழந்தைகளுக்கு அர்ப்பணிப்புள்ள பெற்றோராகவும் இருப்போம். அவர்களின் மகிழ்ச்சியும் நல்வாழ்வும் எப்போதும் எங்கள் இருவரின் பொதுவான முன்னுரிமையாக இருக்கும்.
இந்த தனிப்பட்ட மாற்றத்தின் போது, உங்கள் புரிதலையும், அன்பையும், எங்கள் தனிப்பட்ட உரிமைக்கான (privacy) மரியாதையையும் எதிர்பார்க்கிறோம்.
இந்தப் பயணம் முழுவதும் எங்களுக்கு உறுதுணையாக நின்ற அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தாலும் தொடர்ந்து நல்ல நண்பர்களாக இருப்பது எப்படின்னு ஒரு புத்தகம் எழுதி அண்ணா நூலகத்துக்கு அனுப்பி வைக்கவேண்டியதுதான்.
பி.கு : தற்போது ருக்மணி என்ற பெண்ணுடன் பவன் கல்யாண் காதல் வயப்பட்டதை ஒட்டியே இந்தப் பிரிவு நிகழ்ந்தது என்றும் விரைவில் ருக்மணி அம்மணியை கல்யாண் 4வது திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் ஆந்திரா முழுக்க அனல் அடிக்கிறது.