நடிகர் அஜித்குமார் 
சினிமா

"Please behave yourself... தியேட்டர் கிடையாதுங்க...” கடுப்பான அஜித்!

Staff Writer

நடிகர் அஜித் குமாரின் பேச்சு இணையத்தில் வைரலாகியுள்ளது.

நடிகர் அஜித்குமார் நடிப்பில் மட்டுமல்லாமல் ரேஸிங் நிறுவனம் ஒன்றை தொடங்கி கார் ரேஸிங்கிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

ஓராண்டாகா பல நாடுகளில் நடந்த சர்வதேச கார் பந்தயங்களில் கலந்துகொண்டு குறிப்பிடத்தக்க வெற்றிகளையும் பெற்றுள்ளார். இதனால், அஜித் குமாரால் கார் பந்தயம் குறித்து பரவலான கவனமும் ஏற்பட்டுள்ளது.

தற்போது, துபையில் நடைபெறும் கார் பந்தயத்திற்காக பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். தன் குழுவினருடன் தினமும் நீண்ட நேரம் பயிற்சியில் இருப்பதால் அவரைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வருகையும் தருகின்றனர்.

எவ்வளவு பேர் வந்தாலும் நேரம் ஒதுக்கி அஜித்தும் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார். ஆனால், கடந்த ஞாயிற்றுக்கிழமை கார் பந்தய சாலை பகுதிக்குச் சென்ற ரசிகர்களில் சிலர் விலை மதிப்புமிக்க பந்தய கார்களில் ஏறி அமர்ந்து புகைப்படம் எடுத்திருக்கின்றனர்.

மேலும், குடி போதையில் வந்த சிலரும் கத்தி, கூச்சல் போட்டபடி பிற வெளிநாட்டு வீரர்களின் கார்களை சூழ்ந்ததாகத் தெரிகிறது.

இதனைக் கண்ட நடிகர் அஜித் குமார் அந்த ரசிகர்களிடம், “தயவு செய்து பொறுப்பாக நடந்துகொள்ளுங்கள். இது திரையரங்கம் கிடையாது. நம்ம மானமே போகுது.” எனத் தன் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். ரசிகர்களின் இந்தப் பொறுப்பற்ற செயலைச் சுட்டிக்காட்டி பேசிய அஜித்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.