சினிமா

ஆஸ்கருக்கு சென்ற ராயன் திரைக்கதை... வடசென்னைதான் காரணமா?

Staff Writer

நடிகர் தனுஷ் எழுதி இயக்கி நடித்த ராயன் படத்தின் திரைக்கதை ஆஸ்கர் அகாதெமி நூலகத்துக்கு தேர்வாகியுள்ளது.

வடசென்னையை மையமாக வைத்து தனுஷ் நடித்த புதுப்பேட்டை, பொல்லாதவன், வடசென்னை போன்ற திரைப்படங்கள் அவருக்கு மிகப் பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது. இந்த சென்டிமெண்ட் கைகொடுக்கும் என நினைத்து, ராயன் கதை வடசென்னையில் நடப்பதுபோன்று தனுஷ் இயக்கி நடித்தார்.

இந்த படம் கடந்த வாரம் வெளியானது. வடசென்னையில் தன் தம்பிகள் மற்றும் தங்கையுடன் வாழ்ந்து வரும் ராயன் (தனுஷ்) எதிர்கொள்ளும் பிரச்னைகளும் திருப்பங்களுமாக உருவான இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகின்றன.

படம் ரூ.100 கோடி வசூலித்தாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி, பிரகாஷ் ராஜ் சிறப்பாக நடித்திருப்பதாக விமர்சனங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் ராயன் படத்தின் திரைக்கதை அகாதெமி மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் நூலகத்தில் தேர்வாகியுள்ளதென தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ் தனது எக்ஸ் தளத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

தனுஷுன் ஐம்பதாவது படத்துக்கு இப்படி அங்கீகாரம் கிடைத்திருப்பது அவரின் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், அகாதெமி மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் நூலகத்துக்கு இதற்கு முன்பு ஹரிஷ் கல்யாண் நடித்த பார்க்கிங் திரைக்கதை தேர்வானதும் குறிப்பிடத்தக்கது.