Personal
சினிமா

99 படங்கள் தயாரித்த சூப்பர் குட் சவுத்ரி கார் விபத்தில் காலமானார்!

Staff Writer

விஜய்யின் 'பூவே உனக்காக' அஜித்தின் ' நீ வருவாய் என' சரத்தின் 'நாட்டாமை' உள்ளிட்ட 99 படங்களை தயாரித்த தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான சூப்பர் குட் சவுத்ரி இன்று மாலை 3 மணி அளவில் உதய்பூரில் நடந்த கார் விபத்தில் காலமானார்.

தமிழ் சினிமாவில் புதுமுக இயக்குநர்களின் வேடந்தாங்கல் என்று பெருமை பொங்க அழைக்கப்பட்ட நிறுவனம் சூப்பர் குட் ஃபிலிம்ஸ். இதன் நிறுவனர் ஆர்.பி.சவுத்ரி. டைரக்டர்கள் விக்ரமன், கே.எஸ். ரவிக்குமார், எஸ். எழில், ராஜகுமாரன், சசி, பால சேகரன், பிருந்தா சாரதி, ரவி மரியா உட்பட 34 இயக்குநர்களை அறிமுகப்படுத்தி சாதனை படைத்தவர்.

சிக்கனமாக அதெ சமயம் நல்ல கதை அம்சம் கொன்ட படங்களைத் தயாரித்து வந்தவர் மெகா பட்ஜெட் படங்களின் அதிகரிப்பால் படத்தயாரிப்பிலிருந்து சற்று ஒதுங்கியிருந்தார்.

துள்ளாத மனமும் துள்ளும், நாட்டாமை, பூவே உனக்காக, கோகுலம், சுந்தர புருஷன், சொல்லாமலே என்று 99 படங்க்கள் வரை தயாரித்திருந்த சவுத்ரிக்கு 100 வது படமாக விஜய்யை வைத்து தயாரிக்க ஆசை. அதற்கு ஓகே சொல்லியிருந்த விஜய் தனது அடுத்தடுத்த கமிட்மென்ட்களால் தள்ளிப்போட்டுக் கொண்டே வந்தார்.

இந்நிலையில் மிக துரதிர்ஷ்டவசமாக இவ்விபத்து நேர்ந்திருக்கிறது.

[