சினிமா

ஆர்வக்கோளாறு ஆர்.ஜே. பாலாஜி… கம்பெனி சீக்ரெட்டை லீக் செய்த சூர்யா

Staff Writer

படம் சுமாராக இருந்தாலும் சற்றும் மனம் தளராமல் புரமோஷன் வேலைகளில் ஈடுபட்டால் கொஞ்சமாவது எஸ்கேப் ஆகிவிடலாம் என்பதற்கு லேட்டஸ்ட் உதாரணம் சூர்யா, ஆ.ஜே.பாலாஜி காம்போவின் ‘கருப்பு’. படம் அதிரிபுதிரி ஹிட். கலெக்‌ஷன் 200கோடிக்கும் மேல் என்றும், படத்தில் இருந்ததைவிட சூப்பராக கதை கட்டப்ப்பட்டாலும் அசல் தேறிவிட்டது என்பதே நிஜநிலவரம்.

இரு வெள்ளிகளுக்கு முன்பு ரிலீஸான சூர்யாவின் கருப்பு இன்னும் சில திரையரங்குகளில் சுமாரான வசூலுடன் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் வெற்றி என்று ஆனால்தான் இருவருக்குமே வாழ்வு என்பதால் சூர்யாவும் இயக்குநர் பாலாஜியும் தங்களால் இயன்ற அத்தனை புரமோஷன்களிலும் இறங்கியிருக்கிறார்கள். குறிப்பாக ஆர்.ஜே. பாலாஜி,… தியேட்டர்களில் சாமி வந்து ஆடுகிறவர்களுக்கு தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்துங்கள். அவர்களை வீடியோ எடுத்து சோஷியல் மீடியாக்களில் பரப்பவேண்டாம். [தயவு செய்து பரப்புங்க சாமி] என்று அடுத்தடுத்து வேண்டுகோள் வைத்ததோடு பல கருப்பசாமி கோவில்களுக்கு விஜயம் செய்து பல அடி உயரங்களில் கருப்பசாமிக்கு அரிவாளையும் லஞ்சமாக படைத்திருக்கிறார். இன்னொரு பக்கம் இந்தக் கதை விஜய்க்காக செய்தது என்றொரு கதையையும் அவரே கிளப்பிவிட்டிருக்கிறார்.

இந்நிலையில் கருப்புவுக்கு சக்சஸ் மீட் நடத்திய நடிகர் சூர்யா, அந்நிகழ்வுக்கு ஆர்.ஜே.பாலாஜியை அழைக்காமல் தவிர்த்தோடு, "கருப்பு படத்தின் கிளைமேக்ஸில் வரும் பாடல், எனது உதவியாளர் குமார் என்ற தம்பி அவர் 25 வருடங்களாக என்னுடைய உதவியாளர். அவர் கொடுத்த யோசனையின்பேரில் 5 மாதங்கள் கழித்து மீண்டும் படமாக்கினோம். தற்போது அந்த காட்சிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. படத்தின் வெற்றிக்கு அப்பாடல் மிக முக்கிய காரணம்” என்று கம்பெனி சீக்ரெட்டை பப்ளிக்காக லீக் செய்திருக்கிறார்.

சூர்யாவின் அந்தப் பேச்சு ஆர்.ஜே.பாலாஜியை பயங்கர அப்செட் ஆக்கியிருக்கிறது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram