பாடகர் வேடன் திருமணம் 
சினிமா

காதலியை திருமணம் செய்தார் பாடகர் வேடன்!

Staff Writer

பிரபல பாடகர் வேடன் தன் நீண்ட கால காதலியைத் திருமணம் செய்துள்ளார்.

மலையாள திரையுலகில் மிகவும் பிரபலமானவர் ராப் பாடகர் வேடன். வேற்றுமைகளுக்கும், அடக்குமுறைகளுக்கும் எதிராகத் தொடர்ந்து பாடி வருவதால் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது. சுயாதீன பாடகராக மட்டமல்லாமல் திரைப்படங்களிலும் பாடி வருகிறார்.

தமிழில் பைசன் திரைப்படத்தில் இடம்பெற்ற காளமாடன் பாடலைப் பாடி அசத்தியிருந்தார்.

இந்த நிலையில், தன் நீண்ட நாள் காதலியும் எழுத்தாளருமான நவமி லதா என்பவரை வேடன் நேற்று (பிப். 24) திருமணம் செய்துகொண்டார். அவரின் வீட்டில் நடைபெற்ற திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர். இந்த இணைக்கு பலரும் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.