எஸ்டிஆர்49  
சினிமா

சிம்பு - வெற்றிமாறன்: 80ஸ் கெட்டப்பில் வீரநடை.. வெளியான மாஸ் வீடியோ!

Staff Writer

வெற்றிமாறன் பிறந்தநாளையொட்டி சிம்பு நடிப்பில் உருவாகும் ‘எஸ்டிஆர்49’ படத்தின் புரமோ வீடியோ வெளியாகியுள்ளது.

நடிகர் சிலம்பரசன் இயக்குநர் வெற்றிமாறன் கூட்டணியில் பெயரிடப்படாத புதிய திரைப்படம் உருவாகிறது. வடசென்னையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்திற்கான புரமோ படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

நடிகர் தனுஷ் நடித்த வடசென்னை கதையைத் தொட்டு இப்படம் உருவாகவுள்ளதால் இதில் சிம்புடன் இணைந்து தனுஷ் நடிப்பாரா என்கிற கேள்விகளும் எழுந்தன.

இந்த நிலையில், இயக்குநர் வெற்றி மாறனின் பிறந்த நாளான இன்று படத்தின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அதை உறுதிசெய்யும் விதமாக இப்படத்தின் தயாரிப்பாளர் தாணு, டிரம்ஸ் மற்றும் தீ எமோஜிகளுடன் இன்று மாலை 6.02 மணி எனக் குறிப்பிட்டு எக்ஸ் ஊடகத்தில் பதிவிட்டிருந்தார்.

அந்தவகையில், 'எஸ்டிஆர்49' படத்தின் புரமோ வீடியோவை தாணு வெளியிட்டுள்ளார். அதில் 80ஸ் கெட்டப்பில் சிம்பு கையில் கத்தியுடன் நடந்து செல்வது போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. மேலும் படக்குழுவின் பெயர்கள் அனைத்தும் வட சென்னை பட எழுத்து ஸ்டைலில் இருக்கிறது.