நடிகர் சூர்யா - இயக்குநர் வெங்கி அட்லூரி 
சினிமா

லக்கி பாஸ்கர் இயக்குநருடன் இணையும் சூர்யா… கதைக்களம் என்ன?

Staff Writer

நடிகர் சூர்யா லக்கி பாஸ்கர் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

நடிகர் சூர்யா தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 'ரெட்ரோ' எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்தப்படியாக ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் அவரது 45ஆவது படத்தில் நடித்து வருகிறார். அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார்.

இதையடுத்து வாத்தி, லக்கி பாஸ்கர் ஆகிய படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிப்பதற்கான பேச்சுவார்த்தையை கடந்த சில வாரங்களாக சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனர் நாகவம்சி நடத்தி வந்துள்ளார்.

தற்போது இந்த படத்தில் சூர்யா நடிப்பது உறுதியாகியுள்ளது. இப்படம் இந்தியாவில் முதல் இன்ஜின் எப்படி உருவாக்கப்பட்டது என்பதை குறித்து கதைக்களம் என்பதால் இப்படத்திற்கு '760 சிசி' என தலைப்பு வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.