Heartin poster  Heartin poster
சினிமா

ஹீரோயினாக களம் இறங்கிய தங்கம் தென்னரசு வீட்டு தங்கம் !

Staff Writer

“ படங்களில் நடிக்க கடந்த 5 வருடங்களாகவே வாய்ப்புகள் வந்தவண்ணம் இருந்தன. ஆனால் வீட்டில் சம்மதம் கிடைக்கவில்லை “ என்று ஷாக் கொடுக்கிறார் நடிகை இமயா. மகள் ஆஃப் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு.

கிஷோர் குமார் இயக்கத்தில் மடோனா செபாஸ்டின், சனந்த் நடித்துள்ள படம் ‘ஹார்ட்டின்’. ஒரு காதலின் இருவேறு உலகங்களைச் சொல்லும் இப்படத்தின் இன்னொரு நாயகியாக இமயா நடித்துள்ளார்.

அடுத்த வெள்ளியன்று ரிலீஸாகவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் கலந்துகொண்ட இமயா சினிமா துறையில் காலடி எடுத்து வைக்க தனது குடும்பத்தில் இருந்த எதிர்ப்பு குறித்து பூசி மெழுகாமல் வெளிப்படையாகப் பேசினார். “ எனக்கு சினிமா ஆர்வம் அதிகம் என்பதைத் தெரிந்துகொண்ட நண்பர்கள் மூலம் அவ்வப்போது தொடர்ந்து வாய்ப்புகள் வந்துகொண்டேதான் இருந்தன. ஆனால் நடிப்புத்துறைக்குப் போவதில் அப்பா உட்பட யாருக்குமே விருப்பம் இல்லை. அவர்களிடம் நான் தொடர்ந்து கெஞ்சிக் கூத்தாடி இப்படத்தில் மட்டும் நடிக்க அனுமதி வாங்கியிருக்கிறேன். இப்படம் வெளியான பிறகு மனம் மாறி தொடர்ந்து அனுமதிப்பார்கள் என்று நம்புகிறேன்” என்று அப்பாவியாகப் பேசினார்.

பத்திரிகையாளர்கள் சந்திப்பு என்றாலே ஏடாகூடமாக கேள்வி வரவேண்டுமே? அந்த வகையில், ‘திமுக குடும்பத்தைச் சேர்ந்த நீங்கள் உதயநிதி ரசிகையா, விஜய் ரசிகையா? என்று கேள்வி கேட்கப்பட இமைக்கும் நொடிகளே தடுமாறிய இமயா, ‘நான் சூர்யா ரசிகை ‘ என்று கிரேட் எஸ்கேப் ஆனார்.

பொழைக்கத் தெரிஞ்ச பொண்ணு.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram