வா வாத்தியார் கார்த்தி 
சினிமா

வா வாத்தியார் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு!

Staff Writer

நடிகர் கார்த்தியின் வா வாத்தியார் திரைப்பட வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் கார்த்தி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவான வா வாத்தியார் திரைப்படத்தை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரித்து உள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக எடுக்கப்பட்டு வந்த இப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருந்து சில காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது.

பின், டிச. 12 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு அதற்கான புரமோஷன்கள் நடைபெற்று வந்தன.

நேற்று (டிச. 10) இப்படத்தை வெளியிடுவதற்கான தடையை நீக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

காரணம், தொழில் நஷ்டத்திலிருக்கும் அர்ஜுன் லால் சுந்தர் தாஸ் என்பவரிடம் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கடனாக பெற்ற ரூ.21.78 கோடியை செலுத்தும் வரை வா வாத்தியார் படத்தை வெளியிட தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இப்படத்தின் வெளியீட்டை ஒத்திவைக்க தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், டிசம்பர் மாதம் பெரிய படங்கள் திரைக்கு வராததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.