நடிகை திரிஷா 
சினிமா

CM ஆகணும்... ட்ரெண்டாகும் த்ரிஷாவின் பழைய வீடியோ!

Staff Writer

விஜய் - சங்கீதா விவாகரத்து பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில், ‘முதலமைச்சர் ஆக ஆசைப்படுகிறேன்’ என நடிகை திரிஷா பேசிய பழைய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

சமீப நாள்களாக விஜய் - திரிஷா குறித்து மீண்டும் கிசுகிசுக்கள் பேசுபொருளாகி வருகின்றன. பல வருடங்களாகவே கோலிவுட் வட்டாரத்தில் இந்த இரண்டு பேருக்கிடையிலான நட்பு பற்றி பேசப்பட்டு வந்தாலும், இருவரும் இதை நேரடியாக உறுதிப்படுத்தியதுமில்லை, மறுத்ததுமில்லை. அதனால் அவ்வப்போது ஏதாவது ஒரு நிகழ்வு அல்லது கருத்து வந்தாலே, இந்த விஷயம் மீண்டும் சூடுபிடித்து விடுகிறது.

சமீபகாலமாக அந்த விவாதம் சினிமாவை தாண்டி அரசியல் தளத்திலும் பேசப்படுகிறது. ஒரு செய்தியாளர் சந்திப்பில் விஜய் -திரிஷா குறித்து நயினார் நாகேந்திரன் கூறிய கருத்தும் அதற்கு வந்த எதிர்வினைகளும் இணையத்தை திக்குமுக்காட செய்தது.

இப்போது, எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியிருக்கிறது, சங்கீதாவின் விவாகரத்து மனு.

விஜய், நடிகை ஒருவருடன் நெருக்கமாக இருப்பதாக சங்கீதா கூறியதும் மீண்டும் திரிஷாவின் பெயர் இணைய வீதிக்கு வந்தது.

இந்தநிலையில், ‘நான் சி.எம். ஆக ஆசைப்படுகிறேன்’ என திரிஷா பேசிய பழைய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.

சன் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரான விஜய் சாரதி த்ரிஷாவை பேட்டி எடுத்த பழைய வீடியோ தற்போது வைரலாகியிருக்கிறது.

“அடுத்து என்ன செய்ய வேண்டும் என இருக்கிறீர்கள்’ என விஜய் சாரதி கேட்டதற்கு, ’நான் சி.எம். ஆகணும்’ என்கிறார் த்ரிஷா. ‘நிஜமாவா...?’ என அவர் கேட்க, ‘நிஜமாக சொல்றேங்க... உறுதியா...’ என்கிறார் த்ரிஷா.

‘விஜய் முதமைச்சர் என்றால், திரிஷா துணை முதலமைச்சரா..?’ என இந்த வீடியோவை பார்த்த பலரும் கிசுகிசுக்கத் தொடங்கியுள்ளனர்.