சினிமா

விஜய்க்கு மரியாதை செலுத்தத் தயாராகும் உதயநிதி!

Staff Writer

THE BUSINESS OF BUSINESS IS TO DO BUSINESS என்றொரு பிரபலமான மேற்கோள் உண்டு. அந்த வழியில், ஆட்சி மாற்றத்தால் தன் சினிமா வியாபாரம் கொஞ்சமும் சேதாரமாகிவிடக்கூடாது என்கிற எண்ணத்துடன் முதல்வர் விஜய்யை அனுசரித்துப்போக உதயநிதி ஸ்டாலின் முடிவெடுத்திருக்கிறார் என்கிறார்கள்.

திமுக ஆட்சிக்காலங்களில் அரசியலுக்கு இணையாக தங்கள் கொடி பறக்கவேண்டும் என்றே எப்போதும் விரும்புவார்கள். அதை ஒட்டி தயாரிப்பு, விநியோகத்துறைகளில் தனது ரெட்ஜெயண்ட் நிறுவனம் மூலம் திரைத்துறையை தனது சட்டைப் பாக்கெட்டுக்குள் வைத்திருந்தார் உதயநிதி. அந்த ரெட்ஜெயண்ட் நிறுவனத்தின் மேலாளராகவும் உதயநிதியின் ஆல் இன் ஆல் அழகுராஜாவாகவும் வலம் வந்தவர் செண்பகமூர்த்தி. உதயநிதிக்குப் பதில் பல விழாக்களுக்கு ரிப்பன் வெட்டுமளவுக்கு செல்வாக்குக் கொண்டவராகவும் இருந்தார் செண்பகமூர்த்தி.

இந்த தேர்தலிலும் திமுகவின் வெற்றி 100 சதவிகிதம் உறுதி என்கிற எண்ணத்தில் கமல் படம், ரஜினி படம், அவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் படம் உள்ளிட்ட பல படங்களுக்கு பெருமளவில் முன்பணம் கொடுத்து காத்திருந்தனர். ஆனால் எதிர்பாராத ஆட்சி மாற்றம் இவர்களை நிலைகுலைய வைத்துள்ளது.

இந்நிலையில் விஜய்க்கு எதிராக சிறுசிறு மனக்குமுறல்களை வெளிப்படுத்திவந்த உதயநிதி, அரசியலை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம், இப்போதைக்கு தனது திரைத்துறை தொழில் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்கிற எண்ணத்தில் விஜயுடன் சமாதானமாக செல்ல முயன்றிருக்கிறார்.

அதன் முதல் நகர்வாக செண்பகமூர்த்தி தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை சந்தித்து பூங்கொத்து கொடுத்திருக்கிறார்.

நம்ம குடும்பத்துக்கு வியாபாரம்தான் முக்கியம்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram