சினிமா

ஜேசன் சஞ்சயை இயக்கப்போவது ஷங்கரா, ஹெச்.வினோத்தா ?

Staff Writer

முதல்வர் அப்பாவுடன் பழம் விட்டுக்கொண்ட ஜேசன் சஞ்சய் ’சிக்மா’ ரிலீஸுக்குப் பின்னர் ஹீரோவாக களம் இறங்கப்போவதாகவும் அவரை இயக்கவிருப்பவர்கள் பட்டியலில் ஷங்கரும், ஹெச் வினோத்தும் டாப் 2 இடங்களில் இருப்பதாகவும் தகவல்.

விஜய் முதல்வரான பிறகும் கூட குடும்ப உறவுகள் குழப்பமான நிலையில் இருக்க, தற்போது தந்தையும் மகனும் ராசியானதோடு மட்டுமின்றி அவரது மனைவி சங்கீதாவும் விவாகரத்து வழக்கை வாபஸ் வாங்கியுள்ளார்.

இந்நிலையில் ’சிக்மா’ அக்டோபர் 2ம் தேதி ரிலீஸுக்காக காத்திருக்கும் மகன் அடுத்தடுத்து படங்களை இயக்குவதைவிட தனது இடத்தை நிரப்பும் வகையில் ஹீரோவாக களம் இறங்கவேண்டும் என்கிற தனது ஆசையை தூதுவர்கள் மூலம் தெரிவித்துள்ளார் விஜய்.

ஒரு படத்தை இயக்கிமுடிக்க ஒரு வருடத்துக்கும் மேல் போராட வேண்டியிருக்கும். அதுவெற்றிபெறும் வாய்ப்புகளும் மிக் குறைவு. ஆனால் ஹீரோவாக ஜெயிப்பது சுலபம். நம் வெற்றிக்காக இயக்குநர்கள் மாடாக உழைப்பார்கள். வருடத்துக்கு நான்கு படங்கள் வரை நடிக்க முடியும். அதில் இரண்டு வெற்றி பெற்றாலே போதும்.

இப்போதைய நிலவரப்படி சஞ்சய் என் ஸ்டைலில் ஆக்‌ஷன் மசாலா படங்களில் நடித்தால், நான் விடைபெற்றதால் அப்செட்டில் இருக்கிற என் ரசிகர்களை அப்படியே அள்ளிக்கொள்ள முடியும். இயக்குநர்கள் சம்பளத்தை விட நடிகர்களுக்கு எப்போதுமே பத்து மடங்கு அதிக சம்பளம் கிடைக்கும் என்பது உட்பட ஏகப்பட்ட டிப்ஸ்களை தனது வாரிசுக்கு தூதுவர்கள் மூலம் வாரி வழங்கியுள்ளார் விஜய்.

இதன் தொடர்ச்சியாக அவர் அடுத்து நடிக்கும் படத்தின் இயக்குநராக ஷங்கரோ, ஹெச். வினோத்தோ இருந்தால் நல்லது என்றும் ஆலோசனையும் வழங்கியுள்ளார்.

அஜித்தை வைத்து அடுத்து படம் இயக்கப்போகிறார் என்று சொல்லப்படும் இயக்குநர் ஷங்கரும், ஒருவேளை விஜய் தேர்தலில் தோற்றிருந்தால் அடுத்து மீண்டும் விஜய்யை வைத்து படம் இயக்கக் காத்திருந்த ஹெச். வினோத்தும் இப்போதைக்கு சும்மாதான் இருக்கிறார்கள் என்பது ஒரு கூடுதல் தகவல்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram