சமையல் அறை

பெப்பர் சிக்கன் வறுவல்

வெங்கடமூர்த்தி

1.         கோழிக்கறி   -           500கி

2.         இஞ்சி -           20கி

3.         பூண்டு            -           20கி

4.         மஞ்சள் தூள்  -           11/2 தேக்கரண்டி

5.         இலவங்கப்பட்டை    -           2 சிறிய துண்டுகள்

6.         கிராம்பு          -           6

7.         ஏலக்காய்       -           2

8.         கருப்பு மிளகு -           2 தேக்கரண்டி

9.         வரமிளகாய்   -           3 அல்லது 4

10.       கொத்தமல்லி            -           2 தேக்கரண்டி

11.       வெங்காயம்   -           1

12.       கட்டி தயிர்     -           2 தேக்கரண்டி

13.       சீரகம் -           1 தேக்கரண்டி

14.       சோம்பு           -           1 தேக்கரண்டி

15.       கடுகு  -           1 தேக்கரண்டி

16.       கறிவேப்பிலை          -           2 கொத்து

17.       எண்ணெய்    -           3 தேக்கரண்டி

18.       உப்பு   -           தேவையான அளவு

ஒரே அளவாக சிக்கனை வெட்டிக்கொள்ளவும். உப்பையும் மஞ்சளையும் ஒன்றாக கலந்து சிக்கன் மீது தடவி ஐந்து நிமிடம் ஒதுக்கி வைக்கவும். லீ தேக்கரண்டி சீரகம், லீ தேக்கரண்டி சோம்பு, மிளகு, வரமிளகாய், கொத்தமல்லி, ஏலக்காய், கிராம்பு, இலவங்கப்பட்டை ஆகியவற்றை சேர்த்து பொடியாக வரும் வரை வறுக்கவும். வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கி அதனுடன் கட்டி தயிரை சேர்த்து கலக்கி வைத்துக்கொள்ளவும். சிக்கனை வறுத்த பொடி, உப்பு, இஞ்சி, பூண்டு, மஞ்சள் தூள் மற்றும் வெங்காயம் தயிர் கலவையுடன் சேர்த்து 30 நிமிடம் ஒதுக்கி வைக்கவும். எண்ணெய்யை சூடேற்றி அதில் கடுகு நன்றாக தாலித்தவுடன் மீதமுள்ள சீரகம், சோம்பு, கறிவேப்பில்லை சேர்த்து வதக்கவும். இதனுடன் சிக்கன் கலவையை சேர்த்து உயர் தீயில் சிறிது நேரம் மூடி போட்டு வேக வைக்கவும்.

இச்சுவையான பெப்பர் சிக்கன் வறுவலை தக்காளி புலாவ், எலுமிச்சை சாதம், சப்பாத்தி, தோசை அல்லது புரோட்டாவுக்கு பரிமாறலாம்.

நவம்பர், 2015.