நல்வாழ்வு

தினமும் காலிபிளவர் சாப்பிட்டால் என்ன ஆகும்? இதப் படிங்க

ம.தினோவிகா

நீங்கள் அதிக நார்ச்சத்து, குறைந்த கலோரியில் கிடைக்கும் உணவுப் பொருட்களை தேடுகிறீர்களா?

அப்படியானால், நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய உணவு காலிபிளவர்.

தினமும், காலிபிளவரை உணவில் சேர்த்துக்கொள்வதால், நம் உடலுக்குத் தேவையான 75% வைட்டமின் தேவை பூர்த்தியாகும். இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால்,  படிப்படியாக நம் உணவில் சேர்த்துக்கொண்டால் செரிமானக் கோளாறுகள் குறையும்.

காலிபிளவரை உணவில் சேர்த்துக்கொள்வதால் ஏற்படும் நன்மைகள்:

1) இயற்கையாக உடல் எடையை குறைக்க உதவும்

ஒரு கப் காலிபிளவரில் 2.14 கிராம் நார்ச்சத்து உள்ளது. இதனால், நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வை இது தந்து, உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

2) அழற்சியைக் குறைத்தல்

இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்து இருப்பதால், அழற்சி ஏற்படாமல் தடுக்கும்.

3) உடலின் ஊட்டச்சத்தை அதிகரிக்கும்

ஒரு கப் காலிபிளவரில், வைட்டமின் சி-க்கான தினசரித் தேவையில் 75%-க்கும் அதிகமான அளவு உள்ளது. இதனால் உடலில் உள்ள டி.என்.ஏ-வை சரிசெய்யவும், கொலாஜன், இரத்தச் சிவப்பணுக்கள், செரோடோனின் ஆகியவற்றை உற்பத்தி செய்யவும் இது உதவும்.

வைட்டமின் சி நோய் எதிர்ப்புச் செயல்பாட்டிற்கும் துணைபுரியும்.

மேலும், காலிபிளவரில் வைட்டமின் கே, கோலின் சத்துக்களும் நிறைந்துள்ளன. இது எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவுவதோடு, எலும்பு முறிவு ஏற்படும் அபாயத்தையும் குறைக்கும்.

காலிபிளவர், பி வைட்டமின்கள், மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம் உட்பட்ட பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் சிறிய அளவில் வழங்குகிறது.

4) இதயநோய் - புற்றுநோய் அபாயத்தை குறைக்கும்

இரத்த நாளங்களின் பகுதிகளைப் பாதுகாக்கும் இயற்கைப் பொருட்கள் காலிபிளவரில் உள்ளதால், இதயநோய் - புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கும்.

 எங்க கிளம்பிட்டீங்க? காலிபிளவர் வாங்கத்தானே?

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram