கோவை விஜயா வாசகர் வட்டம் சார்பில் வழங்கப்படும் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான "அ.முத்துலிங்கம் விருது – 2026’’, முனைவர் கலைவாணி கருணாகரனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விருதுக்கான பட்டயத்தோடு சேர்த்து ரூபாய் ஒரு லட்சமும் வழங்கப்பட உள்ளது. இந்த விருதுத் தொகையினை காரமடை சவிதா மருத்துவமனை மருத்துவர் டாக்டர். சசித்ரா தாமோதரன் வருடந்தோறும் வழங்கி வருகிறார்கள்.
மொழிபெயர்ப்பாளர்கள் பிரியம்வதா ராம்குமார், ச.தில்லைநாயகம், கல்யாண் ராமன் ஆகியோர் கடந்த ஆண்டுகளில் இந்த விருதினை பெற்றுள்ளார்கள்.
கவிஞர் சுகுமாரனின் பெருவலி நாவலை ஜஹனாரா என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததற்ககா கலைவாணி இந்த விருதைப் பெறுகிறார். வரும் பிப்ரவரி 1 அன்று கோவையில் நடக்கும் விழாவில் இந்த விருது வழங்கப்படுகிறது.