நூல் அறிமுகம்

சினிமாவின் ஜனநாயகம்

Staff Writer

ஒரு காலம் இருந்தது. என்னிடம் அருமையான கதை இருக்கிறது. அதை எடுக்க தயாரிப்பாளர் யாரும் இல்லை என பலர் அப்போது வருத்தப்படுவர். ஆனால் இன்று தொழில் நுட்பம் திரைக்கலையை ஜனநாயகப் படுத்திவிட்டது. கையில் ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் அனைவருக்கும் காட்சி மூலம் கதை சொல்லும் வாய்ப்பை தொழில்நுட்பம் மிகக் குறைந்த செலவில் வழங்கிவிட்டது. இது செங்குத்து ப்ரேம்களில் கதை சொல்லும் காலமாக உருவாகி இருக்கிறது. இந்நிலையில்தான் நம் கையில் இருக்கும் ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்தி எப்படி திரைப்படங்களை ஆவணப்படங்களை எடுப்பது என விளக்கும் விதத்தில் திரைக்கலை ஆசிரியரான நிழல் திருநாவுக்கரசு இந்நூலை எழுதியுள்ளார்.

ஒரு காமிராவின் அடிப்படை இலக்கணங்களான போகஸ், பிரேம், போன்றவை முதல் பிளாக் மேஜிக், பிலிமிக் புரோ, டாவின்சி ரிசால்வ் முதலான செயலிகள் வரை அனைத்தையும் இந்நூலில் விளக்கி இருக்கிறார்.

ஸ்மார்ட்போன் மூலம் எடுக்கப்பட்ட முக்கிய திரைப்படங்களையும் முக்கிய ஆளுமைகளையும் இந்நூலின் மூலம் ஆவணப்படுத்தி உள்ளார். தமிழ்த் திரைக்கலை ஆர்வலர்களிடம் இருக்கவேண்டிய முக்கிய நூல் என இதைச் சொல்லலாம்.

எல்லோருக்குமான சினிமா (ஸ்மார்ட்போன் பிலிம் மேக்கிங்), நிழல் ப. திருநாவுக்கரசு, நிழல் பதிப்பகம், 31/48, ராணி அண்ணா நகர், கேகே நகர், சென்னை-78 பேச: 9003144868 விலை: ரூ.300

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram