நூல் அறிமுகம்

தன்னைத் தான் காக்க...

Staff Writer

இயக்குநர் ராசி அழகப்பன் காலையில் எழுந்ததும் ஐந்து கிமீ ஓடிவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார். உடல் நலத்தைப் பேணுவதில் அக்கறை காட்டும் அவர் மனநலத்தையும் சேர்த்துப் பேணவேண்டும் என்பதை வலியுறுத்தி எழுதி இருக்கும் நூல் இது.

வாழ்க்கையில் வெற்றியை அளவிட சில காரணிகள் உள்ளன அவர் என்னும் அவற்றைப் பட்டியலிடுகிறார்: உடல்நலம், மனநலம், சமூக நலம், பொருளாதார நலம், கல்வி நலம் ஆகியவற்றை அவர் சொல்கிறார். ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையை இந்த காரணிகளுக்கு அளவுகோல் வைத்து வெற்றியை அளந்துகொள்ளலாம். இவற்றை எல்லாம் அறிந்தும் பிறர் போல் வெற்றிகரமாக வாழமுடியவில்லையே என்று தூக்கம் தொலைத்தால் யார் பொறுப்பு? எனக் கேட்கும் அழகப்பன், 'தன்னைத் தான் காக்க' என்பதை முன் வைக்கிறார்.

'சின்னத் தவறுகளைப் பொருட்படுத்தாதீர்கள்; ஏனெனில் நம் தவறுகளையும் பிறர் பெரிதுபடுத்தாமல் இருப்பார்கள்.''பிறர் பேசவேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்: நீங்களே தொடங்குங்கள். காற்று என்ன உங்களைக் கேட்டுக்கொண்டா வந்து சுவாசமாகிறது" என்பது போன்ற பல பொன்மொழிகளை நூல் முழுக்கத் தெளித்துள்ளார். ஆங்காங்கே பொருத்தமான குறள்களைக் காட்டி இருப்பது சுவை! இந்நூலையே இன்னும் விரிவுபடுத்தி மேலும் பல உதாரணங்களுடன் அவர் எழுதவேண்டும்.

மகிழ்ச்சியோடு வாழ எளிய வழிகள்!, ராசி அழகப்பன், வெளியீடு: பேஜஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை 600119. பேச: 9176804412; விலை ரூ.100.