’ஒவ்வொரு நாளும் தீபாவளிதான். எனக்குப் புடிச்ச வெடியே இந்த சிரிப்புவெடிதான் எங்கே போனாலும் அதைப் பண்ணிக்கிட்டே இருப்பேன். ஒர்த்தரு சீரியஸா மூஞ்ச வெசிருந்தாலும் எனக்குப் பிடிக்காது. குறுக்க ஜோக் அடிச்சு மூடை மாத்திவிட்டிருவேன்.
திடீர்னு ஒருத்தர் வந்து உங்களுக்கு ஒரே சன்னான்னு கேட்டார். ‘சார் எனக்கு மட்டும் இல்ல; உலகத்துல எல்லோருக்கும் ஒரே சன் தான்; காலையில் வரும் சாயந்தரம் போயிடும்னேன். இன்னொருத்தர் வீட்டுக்கு வந்து நாங்க டெல்போன்ஸ்லேர்ந்து வர்றோம்னார். அச்சச்சோ அவ்ளோண்டு டெல்போன்லேர்ந்து எப்படிசார் வர்றீங்கன்னு கேட்டேன். அப்படியே திரும்பிப் போய்ட்டார். இப்படி நார்மலா பேசறதே கிடையாது.. அதுவே பழக்கமாயிடுச்சு.
ஓட்டல்ல ஒருத்தரப் பாத்தேன். கலர் கலரா ட்ரெஸ் போட்டுட்டு இருந்தார். நல்லாருக்கு டீ ஷர்ட்டுன்னு சொன்னேன். ஆமாசார் உங்களது மாதிரியே இருக்கு சார்ன்னார். எங்க வாங்கினீங்கன்னு கேட்டேன். ஏதோ ஒரு டாட்காம்ல வாங்கினதா சொன்னார். அடுத்ததா சாதா ஒரு கேள்வி கேட்டேன். இந்த சட்டை சுருங்குமான்னு கேட்டேன். கேட்டதும் எனக்கு ஒரு லுக்; அவரு டீ சர்ட்டுக்கு ஒரு லுக் வுட்டாரு. அல்லோ இதுவரை பத்து தடவை போட்டுட்டேன்ன்னார். பத்து தடவை போட்டேங்கிறீங்க.. ஒரு தடவையாவது வாஷிங் மெஷின்ல போட்டீங்களான்னேன். அத்தோட அந்த ப்ரெண்டு கட் ஆகிட்டாரு.
ஒரு பெண்மணியை ஓட்டலில் பாத்தேன். மாஸ்க் போட்டுருந்தாங்க. என்னத் தெரியுதானு கேட்டாங்க. உங்களத் தெரில; மாஸ்க் மட்டும்தான் தெரியுதுண்ணேன். கோபம் வந்துடுச்சி. என்னத்தெரியலயான்னு கோபமா கேட்டாங்க. தெர்லன்னதும் மாஸ்க்கை கீழே இறக்கிட்டு இப்பயும் தெரியலயனாங்க… அப்பவும் தெரியல. உடனே யாரையோ ராம்னு கூப்பிட்டாங்க.. ‘டேய் பார்றா… இவருக்கு என்னைத் தெரியலையாம்’னு கம்ப்ளைண்ட் பண்ணாங்க. என்ன விசயம்னு விசாரிச்சா 1986-ல நான் திருவனந்தபுரம் கிரிக்கெட் போனப்ப அவங்க வீட்டுல லஞ்ச் சாப்பிட்டுருக்கேன். ‘ஓ இப்ப தெரியுது. அன்னிக்கு நீங்க கொடுத்த முருங்கைக்காய் கூட இன்னும் பிரிட்ஜ்ல வச்சிருக்கேன்’ன்னு சொல்ல அவங்களுடைய கோபம் பெரிசாயிடுச்சு.. அப்புறாம் நான் ஏன் அங்க நிக்கிறேன்?
இன்னொருத்தர் வந்தாரு..என்னைத் தெரியுதான்னு கேட்டார். சத்தியமா தெர்லேன்னேன். நீங்க 1980ல லயோலா காலேஜ் பஸ்ல போவீங்க அப்ப நான் தான் கண்டக்டர்னாரு… ஓ... இப்ப அந்தவேலையில தான் இருக்கீங்களா?னேன். இல்ல நின்னுட்டேன்ன்னாரு. அப்பயும் நின்னுட்டுதான் இருந்தீங்கன்னு நான் சாதாரணமா சொன்னேன். திரும்பிப் போயிட்டாரு.
வீட்டுக்குப் பக்கத்துல ஒரு ஓட்டல்லதான் நான் வழக்கமா சாப்பிடுவேன். அங்க ஒரு லேடி வந்தாங்க. சீரகத் தண்ணி குடிக்கிற பாத்துட்டு.. அய்யோ.. சீரகத் தண்ணியா? உடம்புக்கு ரொம்ப நல்லதுன்னாங்க. ஆமா, அதான் குடிக்கிறேன்னு சொன்னேன். கேரளால ரொம்ப பேமஸ்னாங்க. அவ்வளவு தூரம் போக முடியாதே.. அதான் இங்கேயே வாங்கிக் குடிக்கிறேன்னு சொன்னேன். அவங்க மலையாளத்துல என்னை திட்டிட்டே போய்ட்டாங்க.
கொண்டாட்டமா இருக்கணும். எப்பயும்.என் குருப்பில ஒருத்த ஹைப்பர் நெகட்டிவா இருப்பான். என்ன சொன்னாலும் என்னத்த அப்படின்னு அலுத்துக்குவான். பிறந்த நாள் கொண்டாடலையான்னா அடப் போங்கய்யாங்கற டைப். அவன ஒரு முறை பழிவாங்கணும்னு முடிவு பண்ணேன். ஒரு தீபாவளிக்கு வீட்டுக்கு வந்தான். நான் புதுச்சட்டை போடாம சும்மா ஒரு லுங்கிய கட்டிட்டு உக்கார்ந்திருந்தேன். என்னப்பா இப்படி உக்காந்திருக்கேன்னான். ஒரு துக்கம்னேன். அச்சச்சோ யாருப்பான்னான். நரகாசுரன் செத்துட்டாருன்னேன். என்னை அடிக்காத குறையா பாத்துட்டு போயிட்டான்!
இன்னொரு இடத்தில் ஒருத்தர் வந்து என்கிட்ட தன் பெயரைச் சொல்லி நான் சைக்காலஜிஸ்ட் அப்படின்னாரு. சரின்னேன். நீங்க தானே பாஸ்கின்னு கேட்டார். அப்படித்தான் நினைக்கிறேன்னு சொன்னேன். உங்க போன் நம்பர் குடுங்கன்னார். சரின்னு குடுத்தேன். வாங்கிட்டு சார் நான் போன் பண்ணா தப்பா எடுத்துக்க மாட்டீங்களேன்னு கேட்டார். ஓ… நானும் போன் எடுக்கலைன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்களேன்னு கேட்டுட்டேன். அப்படியே போய்ட்டார்!
இன்னொரு இடத்தில் என்னோட ஒரு காமெடி ஷோ. இண்டர்வல் ஸ்டேஜுல ரெஸ்ட் ரூம் போனேன். ஒருத்தர் என்னை பாத்து சிரிச்சிட்டே உள்ளே வந்தார். ஒரு செல்பி எடுத்துகலாமா என்று கேட்டார். ‘ஏங்க செல்பி எடுக்க வேற எடமே கிடைக்கலையா?’ன்ன்னேன். அவர் பயங்கரமா சிரிச்சிட்டு.. ‘எப்படி சார் உங்களுக்கு நேச்சரலா வருதா?’ன்ன்னார். இங்க எல்லோருக்கும் அப்படித்தானே வரும்னு கேட்டேன். அங்கேயே விழுந்திட்டாரு.
பீச்சுல நடந்து போயிட்டிருந்தேன். ஒரு குரூப் என்னைப் பார்த்து அமைதியாயிடுச்சு. அவங்கள கிராஸ் பண்ணும்போது கொஞ்சமா சாப்பிட்டா கொஞ்சமா நடக்கணும்; நிறைய சாப்பிட்டா நிறைய நடக்கணும்னு கமெண்ட் பண்ணாங்க. நான் நின்னுட்டு தண்டசோறா இருந்தா ஒரே இடத்துல உக்காந்திருக்கணும்னேன்… சிரிச்சுட்டாங்க.
ஒரு ஜாலியான கேள்வி பதில் நிகழ்ச்சியில் தீபாவளி ராக்கெட்டுக்கும் விண்வெளி ராக்கெட்டுக்கும் என்ன வித்தியாசம்னு கேட்டாங்க. என் பதில்:
‘கீழே வெடிச்சுட்டு மேல போச்சுன்னா விண்வெளி ராக்கெட்டு; மேலே போய் வெடிச்சா தீபாவளி ராக்கெட்!’’