இன்று ஒரு சொல் - மட்டு
பொருள் விளக்கம்:
1. அளவு. (சூடா.)
2. எல்லை. வடிவுக் கோர் மட்டுண்டாமோ (ஞனவா. தேவா. 1)
3. உத்தேச மதிப்பு
4. மிதம்
5. சாமானியம். மட்டாய்ச் செலவிடு
6. நில அளவு வகை
7. தேன். மட்டு வாயவிழ்ந்த தண்டார் (சீவக.)
8. கள். வெப்புடைய மட்டுண்டு (புறநா. )
9. சாறு. கருப்புமட்டு வாய்மடுத்து (திருவாச.)
10. காமபானம். மட்டுடை மணமகள் (சீவக.)
11. மது வைக்கும் சாடி. மட்டுவாய் திறப்பவும் (புறநா.)
12. வாசனை. மட்டு நீறொடும் (இரகு. இரகுவுற்.).