இன்று ஒரு சொல் - நயத்தல்
பொருள் விளக்கம் :
1. விரும்புதல் - பிறன் வரையாள் பெண்மை நயவாமை நன்று (திருக்குறள்)
2. சிலாகித்தல் - நல் லறிவுடையோர் நயப்பது வேண்டியும் (சிறுபஞ்சமூலம்)
3. அன்பு செய்தல் (சூடாமணி நிகண்டு)
4. மகிழ்தல்- வல்லமன்ற நீ நயந்தளித்த (புறநானூறு)
5. இனிமையுறுதல் - நஞ்சினுங் கொடிய நாட்ட மமுதினு நயந்து நோக்கி (கம்பராமாயணம்)
6. கௌரவித்தல்
7. தட்டிக்கொடுத்தல்
8. கெஞ்சுதல்
9. இணங்கிப் போதல்
10. பயன்படுதல்
11. மலிந்துபோவது
12. மேம்படுதல்