இன்று ஒரு சொல் - பசப்பு
பொருள் விளக்கம்:
1. இன்முகம் காட்டி ஏய்ப்பது - தந்திரமாய் மாதைப் பசப்ப வென்று (விறலிவிடு தூது)
2. பசப்பு-தல் = அலப்புதல், அதிகமாகப் பேசுதல்
3. பசப்பு-தல் = பாசாங்கு செய்தல்
4. பச்சை நிறம் - பால்பொன் பசப்புக்கார் வண் ணம் (நாலாயிர திவ்விய பிரபந்தம்)
5. பெண்களுக்குப் பிரிவு ஆற்றாமையால் ஏற்படும் நிறவேறுபாடு (தொல்காப்பியம், திருக்குறள்)
6. ஈரப்பற்று
7. நலம்
8. வளம்