இலக்கியம்

இன்று ஒரு சொல் - இமிழ்

Staff Writer

இன்று ஒரு சொல் - இமிழ்

பொருள் விளக்கம் :

1. ஒலி - இமிழ் கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய (சிலப்பதிகாரம்)

தெரியிமிழ் கொண்டநும் மியம்போ லின் னிசை (மலைபடுகடாம்) 

புள்ளின மிமிழும் புகழ்சால் விளைவயல் (புறநானூறு)

2. பிணைப்பு; அன்பு அல்லது பற்றினாலான உறவு

இமிழ்கொளு மன்பு (திருவானைக்காவுலா) 

3. கயிறு - சொல் லிமிழிற் பூட்டி (சீவகசிந்தாமணி)

4. இசை

5. மிகுதல்

6. இனிமை

7. சிமிட்டல்

8. தழைத்தல் - மருதிமிழ்ந் தோங்கிய நளியிரும் பரப்பின் (பதிற்றுப்பத்து)

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram